பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

et செங்கருப்பங் காட்டெழுந்த நெருப்பு-மேல் செவ்வாணம் ஏங்குகின்ற தவிப்பு-வான் தீயணைத்து வந்த கிலா - திரையிடுமே கருஞ்சரிகைச் சேலை பொன் மாலை! பொங்குகடல் நீள் இசையைக் கேட்டு-விண் பூத்திருக்கும் மீனினத்தைக் காத்து-வெண் சங்குகிறப் பிள்ளைமதி தங்கிவிழித் தொளிவீசும் சாலை! பொன் மாலை புன்னைமர நீள்கடலின் ஒரம்-கடல் புரண்டுவரும் மாலைமங்கும் நேரம்-கரை பூத்திருக்கும் தாழைமடல் - காத்திருக்கும் நாரையைப்போல்-நானே இருந் தேனே! என்னருகில் வந்துவிட்டாய், இன்பம்!-ே இல்லையெனில் என்வாழ்வே துன்பம்!-இசை எழுப்பு:கடல் போல்கவிதை எழுப்பியதே என்னுளத்தில் வேலை! பொன் மாலை! - - 24.11-'66