பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கவில்லை. எதற்கும் கலங்கவில்லை-கான் எதற்கும் கலங்கவில்லை! மதுமலர் வண்டு வானம் பாடி - வாழ்வதுபோல் வாழ்வேன்-இசைத்தே வாழ்வதுபோல் வாழ்வேன்! அன்னை இழந்தேன் அப்பன் இழந்தேன் அன்றும் கலங்கவில்லை-வறுமைக் கென்றும் கலங்கவில்லை! முன்னர்ப் புகழ்ந்தோர் பின்னர் இகழ்ந்தோர் மூடர் கணிகண்டேன்-வாழ்வில் மூடர் கணிகண்டேன்! ஈருயிர் இணக்கம் இன்பப் பெருக்கம் என்பார் உலகினிலே-காதல் என்பார் உலகினிலே! காரிருள் வானில் நிலவைத் தேடும் கதையாய்ப் போனதுவே-காதல் கதையாய்ப் போனதுவே! (எதற்கும்; 2. (எதற்கும்) 3 (ாதற்கும்)