பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv கவிஞனாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால், தமிழ்க் கவிதைகள் மேலும் பிரெஞ்சுக் கவிதைகள் மேலும் எனக்கு ஈடு இணையற்றதொரு பிடிப்பு உண்டாகி இருந்தது. ** 1932 g h =2, sir@ Certificate Etude primoure Elimantaire Francaise என்ற பிரெஞ்சுத் தேர்வில் வெற்றிபெற் றேன். மீண்டும் புதுவையில் சென்றுதான் படிக்க வேண்டும். அவ்வாறே புதுவை கல்வே கல்லூரியில் சேர்ந்து படிக் கத் தொடங்கினேன். என் சிறு வயது முதலே மரக்கறி உணவென்றால் எனக்கு ஒரே வெறுப்பு. என் பாட்டியால் புலால் உணவு உளட்டியே வளர்க்கப்பட்டவன் நான். மாதம் ரூபாய் 10க்கு எனக்கு உணவளிக்குமாறு புதுவை கிருஷ்ணன் நாயர் மிலிட்டரி ஒட்டலில் என் தந்தை எனக்கு உணவு ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கோ ஊதியம் மாதம் 15 ரூபாய் தான். அந்த நிலையில் என்னைக் கல்லூரியில் படிக்க வைக்க அவர் என்னென்ன தொல்லைகள் பட்டிருப்பார் என்று நினைத்துப் பார்க்கின் மிகுந்த வேதனை அடை கிறேன். அவர் தம் கடமை உணர்வை எண்ணிப் பெருமைப் படுகிறேன். என் தந்தைக்குத் தெரிந்த ரொட்டிக்கடைக்காரர் வீட்டு மாடியில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடாகி இருந் தது. அந்த இடம் எனக்குப் பிடிபடவில்லை. இரண்டொரு மாதங்களில் வேறொரு உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தேன். அங்கும் நான் நிலையாக இருக்க முடியவில்லை. கடைசியாக உணவு விடுதிக்கு அண்மையில் இருந்த திருமுடி நடராச செட்டியார் வீட்டு மேல் மாடியில் ஒர் அறையில் நான் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்திருந்தார் என் தந்தை. அந்நாளில் வெளியூரில் இருந்து வந்து தங்கிப்படிக்கும் மாணவர்கட்கு இலவசமாகப் புகலிடம் தரும் அன்புள்ளம் உடையவர் திருமுடி நடராச செட்டியார். பலருக்கு உணவும் கொடுத்துப் படிக்க வாய்ப்பளித்த வள்ளல் ஆவர்.