பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. xvi கல்லூரியில் பிர்ெஞ்சு தமிழ் வகுப்புகள் தவிர ஆங்கில வகுப்புகளும் நடக்கும். ஆங்கிலப் பாடவேளையில் வகுப்பை விட்டு மறைந்து விடுவேன். ஆங்கில வகுப்பை அசட்டை செய்ததை இன்று நினைத்து வேதனைப் படு கின்றேன். தமிழ் பிரெஞ்சு வகுப்புகள் ஒன்றைக் கூட நான் விட்டதில்லை. 1933ஆம் ஆண்டின் இறுதியில் வில்லியனூரில் என்னுடன் படித்த முஸ்லீம் நண்பர் மஜீது தொடர்ந்து படிக்க வசதி யின்மையால் வீட்டிலிருந்தே தமிழாசிரியர் தேர்வுக்குப் படிக்க எண்ணி தமிழ்ப்பாட நூல்கள் வாங்கினார். எனக் கும் அந்த நூல்களே துணைப்பாடமாகையால் எனது' கல்லூரித் தமிழ் அறிவை அந்த முஸ்லீம் நண்பர்க்கு அவ்வப் போது பகிர்ந்தளிப்பது வழக்கம். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் உண்டாயிற்று. வியாழன், ஞாயிறு ஆகிய வாரத்தின் இரண்டு விடுமுறை நாட்களிலும் இது நிகழும், நினைத்துப் பார்க்கின் சாதிமத வேறுபாடுகள் வேரூன்றியிருந்த அந்தக் காலத்திலும் என் தந்தையார் எனக்கு ஆத்திகப்பற்றை ஊட்டியிருந்த போதிலும் எனக் குச் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய விருப்பு:வெறுப்பு கள் கிடையாது. எல்லாமத மாணவர்களும் என்னுடன் பயின்ற காரணத்தால் அந்தப் பொது நோக்கு ஏற்பட்டிருக் கலாம். நான் முஸ்லீம் கிருத்துவ மாணவத் தோழர் களோடு நெருங்கிப் பழகி அவர்கள் வீடுகளில் உணவும் உண்டிருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் என் தந்தைக் குத் தெரியாது. நான் தாயற்ற பிள்ளை என்பதாலும் கண்டித்தால் கோபித்துக்கொண்டு உணவுண்ண மாட் டேன் என்பதாலும் என் தந்தை தெரிந்தும் தெரியாத வர் போன்றே நடந்து கொள்வார். நண்பர் மஜீத் வறுமையின் காரணமாக அஞ்சல் பட்டு வாடா செய்யும் தொழிலை ஆங்கிலேயர் ஆட்சிக்குட் பட்டிருந்த சென்னை மாநிலம் விக்கிரவாண்டியில் ஏற்றார்,