பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧ அந்நூலுக்குத் தமிழ்த் தென்றல் திரு. வி. க. சென்னைத் தமிழாசிரியர் மன்றத் தலைவர் தமிழ்த் தாத்தா மயிலை இவமுத்து, பேராசிரியர் நாவலர் பசுமலை சோமசுந்தர பாரதி, முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதன் முதலியோர் நல்ல பாராட்டுதலை வழங்கியிருந்தனர். எழிலோவியம் எனக்கு நல்ல புகழையும் பெயரையும் மக்களிடையே .ண்டாக்கித் தந்தது. 1954 ஆம் ஆண்டு மலர் நிலையம் என் கவிதைகளைத் தொகுத்து "வாணி தாசன் கவிதைகள்' என்ற நூலை வெளியிட்டது. - பாரிநிலையம் ஏற்பட்டது போல மலர் நிலையம் பிரிந்து வள்ளுவர்பண்ணை ஆயிற்று. அப்பெயரில் ந. பழனியப்பன் நூல் வெளியீடு செய்து வந்தார். அவர் அதிர்த்த யாத்திரை', 'இன்ப இலக்கியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய மூன்று நூல்களையும் 1939 இல் வெளி யிட்டுதவினார். அதன்பின் அவருக்கும் எனக்கும் சிறு தகராறு காரணமாகத் தொடர்பற்று விட்டது. நினைத்துப் பார்க்கின் அந்தநாட்களெல்லாம் என் புகழ் ஓங்கிக் கு காண்டிருந்த நாட்கள்ாகும். திருச்சி அன்பக வெளியீட்டார் நான் பொங்கல் மலர் களுக்கு எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்களைத் திரட்டி 1959 ஆம் ஆண்டு 'பொங்கற் பரிசு” என்ற நூலை வெளியிட்டனர். வள்ளுவர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த தா. முருகைய முதலியார் உறவினர் பலரோடு கூட்டுச் சேர்ந்து மனோன்மணி புத்தக நிலையத்தைச் சென்னை அயில் ஏற்படுத்தினார். அதிலிருந்து "சிரித்த துனா’, "இரவு வரவில்லை', 'பாட்டுப் பிறக்குமடா" ஆகிய நூல்கள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்தன. - 'இனிக்கும் பாட்டு', 'எழில் விருத்தம்', 'பாட்ட ரங்கப் பாடல்கள்" ஆகிய மூன்று நூல்களும் பாரி நிலையத் தின் வாயிலாக முறையே 1965, 1910, 1972 ஆகிய ஆண்டு