பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oxxxx "ஆள்கின்ற நாற்காலி பொதுமக்கள் சொத்தாம் ஆள்வோர்க்கே என்றென்றும் அதுவுரிமை ஆகா மூளுகின்ற எதிர்ப்பிற்கோ கூச்சலுக்கோ அஞ்சி முற்போக்குத் திட்டத்தைத் தள்ளிப்போ டாதீர்” என்பதேயாகும். - . . : என் கவிதையைப் பற்றித் தமிழரறிஞர் நாவலர் சோம. சுந்தர பாரதி, தமிழ்த்தென்றல் திரு. வி. க., தமிழ்த் தாத்தா பேராசிரியர் மயிலை சிவமுத்து, பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவ நாதம், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் மு. கருணா நிதி போன்றோர் பாராட்டியுள்ளனர். . என் பாடல்கள் ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பாராட்டப் பட்டுள்ளன. . நேஷனல் ஹெரால்டு (National Herald) என்னும் ஆங்கில இதழிலும் மலேசிய ஏடுகளிலும் இலங்கை ஏடு களிலும் என் கவிதையைப் பற்றி ஆய்வுரைகளும் பாராட்டு களும் வெளியிடப் பட்டுள்ளன. திரைப் படங்களில் பாடல்கள் எழுதக் கிடைத்த பல் வேறு வாய்ப்புகளை அஃது - நிலையற்றதெனக் கருதி மறுத்த்துண்டு. இலங்கை சிங்கப்பூர் தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்றுச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் என் குடும்பச் சூழல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டன. . : ...; என்னைப்பற்றி இனி அதிகம் நான் சொல்ல விரும்ப வில்லை. என் கவிதைச் சுவைஞர்களும் ஆய்வுரையாளர் களும் சொல்ல வேண்டியவை பல இருக்கலாம் என நான் நம்புகிறேன். அப்பொறுப்பினை அவர்களுக்கே விட்டு விடுகிறேன். . வணக்கம்!