பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் பன்னூறாண்டிரும்! வானக் கடல்மேல் வரும்ஒட ஞாயிறென ஆனா துழைத்தே அறநெறியைப்-பேணும் சீர் சென்னைத் தமிழ்நெறிச் செம்மல் சிவமுத்தே! இன்னும் பன்னூறாண் டிரும்! நாட்டுக் குழந்தைகள் நாடாள்வோர் என்றெண்ணிப் பாட்டாலும் மாணவர்பண் பாட்டாலும்-காட்டும் சீர் சென்னைத் தமிழ்நெறிக் காவல தீந்தமிழ்போல் இன்னும்பன் னு றாண்டிரும்! தமிழுக்கே எந்நாளும் தண்டூன்றும் மேலோய்! அமிழ்தூறும்.செஞ்சொல் அறிஞ! இமைபோன்ற கன்னித் தமிழ்நெறிக் காவல! வாழ்த்துகின்றேன்! இன்னும்பன் னு றாண் டிரும்! 15–1-'65 தாத்தா எனத்தமிழ் பாடுவனே! தாத்தா மயிலை சிவமுத்துத் தாத்தா எனதுதமிழ்த் தாத்தா! வயதிலும் கைத்தடி யூன்றித் தமிழ்க்குழைக்கும் தாத்தா! வலிவும் வயதும் புகழும் தமிழ்ச்சிறுவர் தாத்தாவிற் கேஎன்றும் தாத்தா எனத்தமிழ் பாடுவனே!