பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரைகள்போல் தவளைகள்போல் தேய்ந்த நம்மை சிங்கம் போல் மதயானைக் கூட்டம் போல தேசுமிகு கார்த்திகையின் தீபம் போல, செய்துவிட்ட கவியரசன் நாமம் வாழ்க. மாவலிமைத் தெய்வமெலாம் தமிழின் பாட்டால் மிக மகிழ்ந்து கேட்டவரம் தருவதுண்டேல், ஏன் எனது பைந்தமிழின் வீரப் பாட்டால் எழுச்சி இங்கே தோன்ருது என்று கேட்டான்? கருக் கொண்ட நாட்டன்பின் தெய்வ வேகம் கதிராகக் கனலாகக் கொதித்த தாங்கே உருக்கொண்ட சிற்றடிமைக் குட்டை வற்றிச் செயல் என்னும் ஆவியதாய்ப் பறந்து மேலே 43