பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயவு செய்து மன்னிப்பீர் போதும் இன்பப் பாடல்களும், கவிதைகளும் பயனே இல்லை! பாலென்று காகிதத்தில் எழுதி விட்டுப் பிள்ளைக்குப் பாலூட்ட எண்ணி விட்டோம்! போரணியில் பீரங்கி முழங்கும்போது, பொம்மைகளை அனுப்பினுல் போரில் வெற்றி பலிக்குமா, புகழ் வருமா, உழைப்பில்லாமல் பெருவீரம், விளைந்திடுமா, பாறைமீது பழத்தோட்டம் போடுகின்ற மூடர் போல பெரும் பேச்சுப் பேசுகிருேம் காலம் நம்மைப் பரிதாபமாய்க் கண்டு சிரிக்குதந்தோ! பரிதாபம், பரிதாபம், பரத நாடே! பொறுமைக்கு எல்லேகாண் பரத நாடே! 29