பக்கம்:வானொலியிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வானெலியிலே

களுக்கு கெற்களேக் கொண்டு போவதற்காக வண்டிப் பாதை யையும், வண்டியையும் எதிர்பாராமல், வாய்க்காலேயும் படகுகளேயும் பயன்படுத்திக் கொள்ளுகிறர்கள். படகுகள் மூலம் அக்காட்டின் எக்த பாகத்திற்கும் போக முடியும். 150 மைல் தூரத்திலுள்ள இயந்திரசாலே ஒன்றுக்குக்கூட கெற்கள் வாய்க்கால் வழியே செல்லுகின்றன. ஒரு படகு சுமார் 10 டன் கெற்களே ஏற்றிச் செல்லும். அதாவது 500 கூடையாகும். சிறிதளவு செற்கள்தான் ரயிற் பாதை வழியாக இயந்திர சாலைகளுக்குச் செல்லுகின்றன. அந்தக் காலத்தில் இரயிற் பிரயாணம் செய்யும்பொழுது இரயிற் பாதைகளுக்கருகில் மலே மலையாக தெற்குவியல்களக் காணலாம். அவைகளின்மீது சூரிய ஒளி படுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மீண்டும் மழைக்காலம் வருவதற்குள் அவைகளே அள்ளி இயந்திர சrலேகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.

பர்மாவில் முதல் முதலாக அரிசி இயந்திரம் (ஸ்டீம் மில்) வைத்தது பெஸ்ஸின் என்னும் இடத்தில்தான். அந்த முதலாவது இயந்திரம் வைத்து இன்றைக்கு 86 வருடங்களாகின்றன. அதன் பிறகு 36 வருடங்களில் அதாவது சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் 54 மில்களாக வளர்ச்சியடைந்துவிட்டன. இப்போது ரங்கூன் அரசாங்கக் கணக்கின்படி அங்கு 700 இயந்திர சால்களிருக்கின்றன. பர்மாவில் கன்செய் கிலங்கள் வளர்ச்சியடைந்த வேகத்தைவிட இயந்திர சாலைகள் வளர்ந்த வேகம் மிக மிக அதிகமானதாகும். சற்று உயர்ந்தவிடத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அக்காடு அரிசி இயந்திரமயமாகவே தோன்றும். உலகின் எந்தப் பாகத் திலும், எந்த காட்டிலும் இவ்வளவு அரிசி இயந்திரக் கூட்டங்களே நம்மால் காண முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/45&oldid=646804" இலிருந்து மீள்விக்கப்பட்டது