பக்கம்:வானொலி வழியே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சென்னை வானெலி நிலையத்தார் அவ்வப்போது என்னைப் பேசுமாறு அழைப்பார்கள். அவ்வாறு பேசியவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்த்தேன். பல அன்பர்கள் குறள், நாலடி பற்றிப் பேசியவற்றைத் தனி நூலாக வெளியிடுமாறு வேண்டினர். அவர்தம் விழைவின்படியே நாலும் இரண்டும்’ வெளியாயிற்று. பின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளில் நான் பேசியவற்றுள் சில, சிறுவர்களுக்கு என்ற நூலில் இடம் பெற்றன. எஞ்சிய கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து இந்த நூலாக வெளியிடுகிறேன். வானெலிப் பேச்சு களாகவே இவை அமைகின்றமையின் இதை வானொலி வழியே என்ற பெயரில் அமைத்துள்ளேன். +r இதில் வருகின்ற பல தலைப்புக்கள் என்ன அவற்றின் வழியே ஆற்றுப்படுத்தின. அவ்வழியே வாய்மொழி இலக்கியம்’, மலைவாழ் மக்கள் மாண்பு', 'தமிழ் உரைநடை போன்ற நூல்கள் வெளிவந்தன. எனவே எனக்கு இத் துறைகளில் உணர்வூட்டிய சென்னை வானெலி நிலையத் தாருக்கு என் நன்றி உரித்து. எவ்வெப்போதோ பேசிய பேச்சுக்களைத் தொகுத்து இன்று வெளியிடுகின்றேன். தமிழுலகம் இந்நூலை ஏற்கும் எனும் துணிபுடையேன். அனைவருக்கும் நன்றி. சென்னை-30 е е - அ. மு. பரமசிவானந்தம் தமிழ்க்கலை இல்லம் ) பணிவுள்ள, 19-4-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/5&oldid=900756" இலிருந்து மீள்விக்கப்பட்டது