உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நீலா, தன் கண்களால் அவரைப் பார்த்து இறைஞ்சி நின்றாள். அடுத்த கணமே, கவிஞரய்யா-இன்பசாகரன் கையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக் கத்தையை வாங்கி அவளது கைகளில் ஒப்படைத்தார். கசரி, நம்பீ - எழுதி வைக்கிறேன்; கறுப்பனை அனுப்புங்கள் என்றார் கறிஞரய்யா! காலையில் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இன்பசாகரன் அவ ரது சுரங்களைப் பற்றி நன்றி தெரிவித்துக்கொண்டு எழுந் தான். அவர் சொன்பைடியே மறுநாள் காலையில் கறுப் டன் அந்தக் குப்பத்திற்குச் சென்று 5 விதையைப் பெற்று வரப்புப்பட்டான். கரப்பன் வருகைக்காக, இன் சாகரன் காசுதிருந்தான். களிஞரப்பா சொன்ன சொல் தவறாமல் அந்தக் கவிதையை எழுதி அனுப்பிவிட்டார். துதான், இன்பசாகரனுக்குப்பரிசு வாங்கிக் " தந்த கவிதை! அந்தப் பரிசுப் பொருள் வெள்ளி மயில் ' இப்போது அவனுக்கு எதிரே இருக்கிறது. அந்த மயில் அடுவது போல் அதாகிறது அலனுக்கு! அது மயிலின் ஆட்டமா? அல்லது வான்கோழியின் நடனமா? சிந்தனை கலைந்து ஒரு நெடிய மூச்சு விட்டுக் கொண்ட இன்பசாகரனிடம் கறுப்பன் அவசரமாக ஓடிவந்து சின்ன எஜமான்? சேதி தெரியுமா? கவஞரய்யா. இறந்து போயிட்டாளாம்" என்று கண்கலங்கச் சொன்னான். அன்பசாகரன், அந்த அதிர்ச்சியான சேதி கேட்டு அலட்டிக் கொண்டதாகத தெரியவில்லை. .. அப்படியா?" என்ற கேள்வியோடு நிறுத்திக் கொண்டான். கவிஞரின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் ஒளிமயமாக ஆக்கப் போகிறேன் என்று அன்றைக்குச் சொன்னான்? ஆனால் அவை அனைத்தையும் மறந்து விட்ட வன்போல, கறுப்பா! உடம்பு ஒரே வலியா இருக்கு!' கொஞ்சம் அமுக்கிவிடு என்று படுத்துக்கொண்டான். ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/33&oldid=1708369" இலிருந்து மீள்விக்கப்பட்டது