உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு, அவனும் அவளுக்குத் திரும்ப வணக்கம் சொல்லி காக்க வைத்துவிட்டேன்' என்று வருத்தம் தெரினிக்கும் பாவனையில் பேசினான் அவளிடம் .. பரவாயில்லை! உங்களைப் பார்த்ததே போதும்** என்று கூறிவிட்டு. தான் அவசரப்பட்டு உணர்ச்சியைழ கொட்டி விட்டதாக உணர்ந்தாள் கண்ணம்மா! இப்பத்தான் ஆபீஸ் வே முடிந்தது! இன் ணைக்கு சில முக்கியமான வேலைகள், மணி அஞ்சாகிவிட் டது. ஆயில் மூடுற நேரம் என் காரில் வந்தால் பேசிக் கொண்டே போகலாமே!" என்றான், இன்பசாகரன் இப்படி ஒரு அழைப்புக்குத் தவமிருந்தாள் கண்ணம்மா என்றாலுங்கூட திடுமெனக் காரில் வருமாறு கூப்பிட்டு விட்டாளே என்பதால் ஏற்பட்ட குழப்பமும் அவளைத் திக்குமுக்காடச்செய்தது. இப்படித்தான் எல்லாப் பெண்களிடமும் நடந்து கொள்வானோ என்ற சந்தேகப் புயலும் எழுந்தது. வருகிறேன் என்று சொல்லாமலும் ரைமுடிய்ாது என்று மறுக்காமலும், இவ்வசாகரனைத் தொடர்ந்து மரடிப்படிகளில் இறங்கி வந்தாள். கார் தயாராக வாயிற்புறத்தில் நின்று கொண் டிருந்தது.இன்பசாகரனின் கைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து கறுப்பன் காரின் மன்னால் வைத்தான். இன்பசாகரன், கண்ணம்மாவைப் பார்த்து, காரின் பின்புற இருக்கையில் ஏறிக்கொள்ளச் சொன்னான். அவனும் தன்னுடன் வந்து உட்காரப்போகிறான்? முன்பகுதி இருக்கையில் அந்தக் கறுப்பு வேலைக்காரன் உட் காரப் போகிறான். இதென்ன தர்ம சங்கடம். இப்படிக் கண்ணம்மாவின் மனம் படபடத்தது என்றாலும், அவள் அந்த வாய்ப்பை அறவே தட்டிக்கழித்தவிடத் தயாராக இல்லை. ஒன் முன்பகுதியில் உட்காரப் போன கறுப்பனைத் தடுத்து இன்பசாகரன் "கறுப்பா! நீ ஏதாவது பஸ் றைப் பிடித்து வீடு போய்ச்சேர்! எனக்குக் கொஞ்சம் வேலை யிருக்கிறது' என்று கூறிக்கொண்டே.. காரின் முன்பகுதி இருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/36&oldid=1708372" இலிருந்து மீள்விக்கப்பட்டது