உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 நல்ல நேரத்தில் நடக்க வேண்டுமென்று கணித்து வைத்திருப் போம். அதுகள் நம்ப கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிட்டு ஏதாவது பண்ணிட்டுதுங்கன்னா : அப்பறம் குடும் பத்துக்கு ஆகாது பாருங்க!' என்று நீட்டி முழக்கினாள் காமாட்சி! TT ஏற்கனவே இருவரும் சந்தித்துக் காதல் கீதல்னு கதை ஆரம்பிச்சிருக்கிற காரணத்தாலே நீங்க சொல்றதும் சரி தான். பெண்ணு, பத்து நாளைக்கு எங்க வீட்டிலேயே இருக்கட்டும்" என்று ஆ மோதித்தாள் நீலாம்பிகையம்மைத் தனக்கும், ஒரு வாரத்துக்கு ஆபீஸ் விஷயமாக பம்பாய், டெல்லி ஆகிய இடங்களில் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு, இன்பசாகரன், வேலைக்காரக் கறுப்பனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணம் புறப்பட்டு விட் டான் புறப்படுவதற்கு முன்பு, கண்ணம்மாவின் வீட்டுக்கும் சென்று அவளிடம் விடைபெற்றுக் கொள்ள விரும்பினான். அவ்வாறே சென்றான் . பத்து நாள் பிரிந்திருக்க வேண்டும். அதுமட்டு மல்ல ; தன்னை விட்டுவிட்டு வெளியூர் வேறு போகிறான் என் றதும் கண்ணம்மாவினால் அந்தப் பிரிவுத் துயரைத் தாங்க முடியவில்லை. கணவனைக் கண்டதும் அவள் அடுக்களைக்கு ஓடிச்சென்று காபி தயாரித்துக் கொண்டு வந்து கொடுத் தாள். தன் மகளின் களிப்பை எண்ணியவாறு அவள் தாய் பூரிப்பு பொங்க நின்றாள். • தலைவன் தன்னைப் பிரிந்து போகப் போகிறான் என்பதறிந்த தலைவி, எவ்வளவு வேதனையுற்றுக் கண்ணீர் வடித்தாள் என்பதை ஓவியமாகச் சித்தரிக்கும் குறுந் தொகைப் பாட்டொன்றை அவள் கைப்பட எழுதி வைத் திருந்தாள். அவன் புறப்படும்பொழுது அதை அவள் கையில் கொடுத்தாள். கண்களில் நீர் துளிர்க்க ! தாமே செல்ப ஆயின் கானத்துப் புலம் தேர் மானைக் கோட்டிடை ஒழிந்த சிறுலீ முல்லைக் கொம்பின் தாஅய் இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர்எழில் பூண் அக வனமும நனைத்தலும் காணார் கொல்லோ மாயீழை நமரோச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/55&oldid=1708391" இலிருந்து மீள்விக்கப்பட்டது