உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 1 புரியும்படி வெளிப்படையாகச் சொல்லி விடுகிறேனே! தாம்பத்திய வாழ்வில் உடலுறவு, அளவுக்கு மிஞ்சினால் இருவர் உடல் நலமும் கெடும்! அதனால் தான் அந்த உறவு எப்படி அமைய வேண்டுமென்று நமது முன்னோர்கள் முறை வகுத்திருக்கிருர்கள். பதினைந்து நாளைக்கு ஒருமுறை என்பார்கள்! அது ஆரம்பத்தில் என் னாலும் முடியாது ! உள்னாலும் முடியாது 1 நாம் வாரம் ஒரு முறை என்று நிர்ணயித்துக் கொள்வோம்! என்ன சரிதானா ?' இன்பசாகரன், கண்ணம்மாவைத் தன்னுடைய உபதேசத்தால் நிலை தடுமாற வைத்துவிட்டான். 'வாரம் ஒரு முறை' என்று அவன் வாக்கியத்தை முடித்த பிறகு அவளுக்குப் போன உயிர் மீண்டும் தான் வந்தது. இல்வையேல்! இவன் ஏதோ பட்டினத்தாரைப் போல மனைவிக்கு உபதேசம் செய்துவிட்டு படுக்கை அறையை வீட்டு வெளியேறி விடுவானோ என்ற பயமும் அவளைத் தொத்திக்கொண்டுவிட்டது. நல்லவேளையாக அறிவுரை அந்த எல்லைக்குப் போகாமல், சுண்ணம்மாவுக்கு ஆறுதல் தரும் அளவுக்கு அமைந்ததே அதுவே போதுமென அவள் 10ிழ்ந்தாள். .. அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு, உடலுறவு கொண்டு - புனிதமான இல்வாழ்வின் நோக்கத்திற்கு மாசு எச்சரிக்கை ஏற்படுத்தி விடக்கூடாது என்றுதான்- முன் யாக கட்டில்களைத் தனித்தனியாகப் போடச் சொன் னேன்`` என்றும் அவள் காரணம் சொன்னான். வெளிநாடுகளில் பெரும்பாலான வீடுகளில் கட்டில்கள் இப்படித் தான் தனித்தனியாக இருக்கும்; கணவனும் மனைவியும் நாற்காலிகளில் அமர்ந்து பேசி மகிழ் வார்கள், உண்டு மகிழ்வார்கள். பின்னர் தனித்தனியாகப் படுத்து விடுவார்கள் எவ்றே ஒருநாள்தான் ஈ.டலுறவை விரும்புவார்கள். அதனால்தான் அவர்கள் திடகாத்திர முள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பெற்ற லும் திடகாத்திரமுள்ள அழகான குழந்தைகளைப் பெறு கிறார்கள்' 29 . இன்பசாகரனின் அறிவுரை நீண்டு கொண்டே போனது! தன் கணவன் ஒரு காமாந்தகாரனல்ல - அதே நேரத்தில் பெண்வாடையே கூடாது' என்ற துறவியுமல்ல -இல்வாழ்வை ஒரு புனிதமான தொண்டாகக் உண்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/71&oldid=1708408" இலிருந்து மீள்விக்கப்பட்டது