உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 BP மிரளாதீர்கள்! இனி எனக்கு நீங்கள் மிஸ் கூர் இன்பசாகரன்தான்! ஆனால் வெளி உலகிற்கு என் கணவர்! ஆண்மையற்ற நீங்கள் ஆடிய கேவலமான நாட கத்தை நான் என் உயிர் போனாலும் சொல்லமாட்டேன். உங்களுக்கு மனைவி தான்! நீங்கள் தாலி கட்டிய மனைவி தான்! உங்கள் தந்திரத்தால் நான் ஏமாந்தேன். ஆனால் படுக்கையறையில் இந்த நிபந்தனைகள் எல்லாம் ஏன்? என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைக்காமல் கிடந்தேன். தெய்வீகத் திரை போட்டீர்களே; அதை ஒரு தாளைக்குத் தைரியமாகக் கிழிப்பது என்ற முடிவோடுதான் தலையணைக்கு அடியில் டார்ச்லைட்டை ஒளித்து வைத்தேன். சே! எவ்வளவு இழிவான போக்கு! தூ! எவ்வளவு மோசமான பண்பும் இப்படி வசைபாடுகிறேனே யென்று பயப்படாதீர்கள்! என் உண்மையான கணவன், ஈறுப்பன் தான். அதனால் நான் இப்போது விதவை! ஆனால், நான் விதவைக் கோவம் பூண மாட்டேன். உங்களை ஊரார் கேவலமாகப் பேச இடம் தரமாட்டேன். கறுப்பனுக்குப் பிறக்கப் போகிற குழந்தையைக்கூட உங்கள் குழந்தைதான் என்று சொல்லி, உங்கள் ஆண்மையை ஊர் முழுதும் பறை சாற்றுவேன்! போய் வாருங்கள்!" இன்பசாகரன், எதுவும் பேசாமல் அவளுக்கு நின்றுவிட்டு அங்சிருந்து புறப் முன்னால் தலைதாழ்த்தி பட்டான்! -- நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாயிற்று. கறுப் பனின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஒரு கற்பனைக் கதை யாகவே கருதிற்றும் எவ்வளவு பெரிய குடும்பத்துப் பிள்ளை இன்பசாகரன், அவன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வான் என்பதை நீதிமன்றம் நம்பத் தயாராக இல்லை. தன்னையும் தன் கற்பையும் காப்பாற்றிக் கொள்ள கண்ணம்மா. தன்னையுமறியாமல் கொலை செய்தாள் என்ற நிலையை ஏற்றுக்கொண்டு அவளை நீதிமன்றம் விடுதலை செய்தது! அடுத்த சில மா தங்களுக்கெல்லாம் கண்ணம்மாவின் பிரசவ காலம் நெருங்கியது. ஏற்காட்டிவ் உள்ள நீலாம்பீசை அம்மாளின் தனி பங்களாவுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/81&oldid=1708419" இலிருந்து மீள்விக்கப்பட்டது