பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 26 வாய்மொழிம் வாசகமும் பொருத்தமாகத் தெரிவிக்கின்றார். இதனால் அடையும் பேறு பொய்யர்கள் என்ற அபகீர்த்திதான். அற்ப மனிதர் களின்மீது ஏற்றங்களை ஏறிட்டுக் கொண்டுகவி பாடினால் அவற்றைக் கொள்ளும் பெருமை அவர்கட்கு இராது. எம்பெருமான்மீது எவ்வளவு ஏற்றமாகக் கவி பாடினாலும் அந்த ஏற்றமெல்லாம் அங்கே மிகவும் பொருத்தமாக அமைந்து விடும் (5); இதனை வன்றொண்டர், கரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல் கடுங்கி கிற்குமிக் கிழவனை வரைகள் போல்திரள் தோளனே என்று வாழ்த்தி னும்கொடுப் பாரிலை (4) என்று கூறுவார். சொற்கள் தவறான இடங்களில் தம்மை அமர்த்தியமைக்கு நாணித் தலைகுனிந்து நிற்கின்றன. சடகோபர் சாற்றுவார் : உங்கள் உடம்பை உழைக்கச் செய்து தொழில் செய்து பிழைக்கலாம். இந்த உலகில் உங்கள் பாட்டுக்கு ஏற்ற செல்வர்கள் இலர் என்பதைத் தெரிந்து கொண்டோம். உங்கள் கவிதைகள் கொண்டு உம் இட்டாத் தெய்வத்தைப் புகழ்ந்து பாடுங்கள், இத்துதி மொழிகள் சிறு தெய்வங்கட்குப் பொருத்தமற்றவை என்று. உண்மையாகவே பொருளுக்கு உரிய எம் திருமாலுக்குச் சேர்ந்து விடும் (6) என்று, சுந்தர மூர்த்தியடிகளும், வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப் பாவியைவழக் கில்லையைப் பஞ்ச துட்டனைச் சாதுவே என்று பாடி னுங்கொடுப் பாரிலை (5) . என்று கூறுவர்.ஆகவே, செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமாறு ஆற்றுப்படுத்துவர். மேற்குறிப்பிட்டவாறு தானித் தலைகுனியும் சொற்கள் இறைவன்மீது பிரயோகப் படுத்தும்போது செம்மாந்து நிற்கின்றன. அவனுடைக அனந்த கல்யாண குணங்களை முற்றிலும் வெளிப்படுத்து