பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤8爵 வாய்மொழியும் வாசகமும் இந்த புருஷ்கார தத்துவம் ஆழ்வார் பாசுரங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். துவிசேர் அன்னம் துணையொடு புணரும் சூழ்புனல் குடந்தையே தொழுது -பெரி. திரு. 1.1:2 என்ற திருமங்கையாழ்வார் பாசுரத் தொடரில் அமைந் திருப்பதைக் காணலாம். துரவிசேர் அன்னம துணையொடு புணரும்’ என்பதில் பெருமாளும் பிராட்டியும் பிரியா திகுப்பதைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். ஈண்டு "அன்னம்’ என்பது பெருமானை துணை என்பது பெரிய பிராட்டியாரை. நம்முடைய குறையைக் பொறுப் பிப்பவளும் பொறுப்பவனும் பிரியாது வாழும் இடம் திருக்குடந்தை" என்ற படியாம். மேலும், - து விசேர் அன்னம் மன்னும் - சூழ்புனல் குடங்தை யானை -திருக்குறுந்.14 என்ற பாகரத்திலும் இந்தச் சேர்த்திநிலை காணப் பெறுகின்றது. - - இங்ஙனம் பிராட்டியும் பெருமானும் நிரந்தரக் சேர்க்கையான இருப்பாலே சேதநன் அச்சம் கொள்ன வேண்டியதில்லை (மூமுட்சு-133). அர்ச்சையில் பெரிய பிராட்டியாரும் அபயகரத்துடன் பொலிவதைக் காண் கின்றோம். இந்நிலை தம்மிடம் வரும் சேத நரை நோக்கி "ஈசுவரனுடைய சுதந்திரத் தன்மைக்கு அஞ்சுதல் வேண்டா; நான் உங்களை அவனோடு சேர்த்து வாழச் செய்கின்றேன்' என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவ தாகும். இன்னும் இம்மதுப்பை ("பூரீமத் என்ற பதத்தை) ஊன்றி நோக்குங்களில் சம்பெருமானைப் பற்றுதற்கு வேட்கையே வேண்டுவது. இருவரும் சேர்ந்திருக்கும் காலத்தை நோக்கி இருக்கவேண்டுவதில்லை" (முமுட்க184) என்பதை அறிய முடிகின்றது. மேலும், பிராட்டியார்