பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 多岛 பியம் குறிப்பிடும். அவனுக்கு மேகநாதன்' என்ற பெயரும் உண்டு அவனே மழைக் கடவுளாகவும் பிற்கால இலக்கியங் களில் குறிப்பிடப் பெறுகின்றான். உயிர்கட்கு இன்றி யமையாத வெப்பத்தையும் ஒளியினையும் தருபவன் கதிரவன். ஆகவே அவனும் கடவுளாகின்றான். பிறந்தநாள் தொட்டுச் சிறந்த தீம்பால் தந்துதவும் பசுக்களுக்கும். உழவர்கட்கு உறுதுணையாயிருக்கும் எருது கட்கும் மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். எனவே பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப் பெறுகின்றது. அஃதாவது மழைவளம் தரும் வானுலக வேந்தனுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையும், உலகம் உவப்ப வலனேர் புதிரிதரும் பலர்புகழ் ஞாயிற்றுக் கடவுளுக்கு இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகையும், மூன்றாம் நாள் நன்றிக் கடனாக பசுக்களுக்கும் எருது கட்கும் மாட்டுப் பொங்கல் விழாவும் ?? நான்காம் நாள். கணுப் பொங்கல், கானும் பொங்கல் கன்னிப் பொங்கல்' என்ற பல பெயர்களில் விழாவும் பண்டிருந்தே நடைபெற்று வருகின்றன. இவை சமய நோக்கில் நடைபெறுகின்றன. - பாரதியாரும் ஞாயிறு வணக்கமாக, காதல் கொண்டனை போலும் மண்மீதே கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே: மாதர்ப் பூமியும் கின்மிசைக் காதல் மண்டி னாள்,இதில் ஐயமொன் றில்லை: சோதி கண்டு முகத்தில் இவட்கே தோன்று கின்ற புதுககை என்னே! ஆதித் தாய்தந்தை விேர் உமக்கே! ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். ' 23. இந்நாளைத் திருவள்ளுவர் திருநாளாகத் தமிழக அரசு கொண்டாடுகின்றது: 24. பா. க: கோ பா: ஞாயிறு வணக்கம்-3