பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலுப் 2片 அணுவின் தத்துவமும் தில்லைத் திரு நடனத் தத்துவத்தில். அம்பலவனின் ஆனந்தக் கூத்தில்-வைத்து விளக்கப் பெற். றுள்ளன; இவற்றை நம் முன்னோர்கள் அழகிய நடராசரின் திருவுருவத்தின்மூலம் நமக்கு என்றைக்கும் எடுத்துக் காட்டாக இருக்குமாறு செய்துள்ளனர், இத் திருஉருவத் தில் திருவாசி ஒம்' என்னும் பிரணவமாகும், இவரது சடை முடி ஞானமே வடிவமானது. இவர் சடையை விரித்து நின்று ஆடுவது இவ்ர் ஞானத்தை அள்ளி வழங்குகின்றனர் என்பதைக் குறிக்கும்.வீசிய கரம் மாயையை உதறித்தள்ளு வதையும், ஊன்றிய பாதம் மலத்தினை அமுக்குவதையும், து.ாக்கிய திருவடி அருளை எடுத்து ஆன்மாக்களை ஆனந்தக் கடலில் அழுத்துவதையும் தில்லைத் திரு நடனம் உட் பொருள்களாகக் குறிக்கும். ஒருகையில் உடுக்கையையும் மற்றொருகையில் சிவந்த மழுவையும் இவர்தாங்கியிருப்பது உலக அமைப்பில் ஒலி ஒளிகளின் முக்கியத்துவத்தைக் குறிக் கும். ஒலி, ஒளிகளின் மூல காரணமும் துடிப்பேயாகும். இந்த நடராசப்பெருமானின் தத்துவமே ஒவ்வொரு அணு வினுள்ளும் ஆடல் அசைவுகளாக அமைந்து கிடக்கின்றது என்பதை இன்றைய அறிவியல் உணர்த்துகின்றது. திருமூலரும் இந்த நடராச தத்துவத்தை, எங்கும் திருமேனி. எங்கும் சிவசக்தி ங்ைகும் சிதம்பரம் எங்கும் திருகட்டம் எங்கும் சிவமா விருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருட் டன்விளை யாட்டதே " என்று விளக்குவர். எங்கும் சிவனுடைய திருமேனி உள்ளது. பார்க்குமிடந்தோறும் அவனுடைய அருளாற்றல் நீக்கமற நிறைந்துள்ளது. அவன் திருவருளால் நடைபெறும் படைத் தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல், என்ற 25. திருமந்திரம் ஒன்பதாந்தந்திரம் - திருக்கூத்து தரிசனம்- ) .