பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 7 சமயமும் அறிவியலும் வடிவெடுக்கும் என்பதையும் மெய்யுணர்வு பெற்ற தாயு மான அடிகள், செகத்தை யெல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணு வில்வைப் பை, அனுத் திரளை யெல்லாம் மகத்துவ மாய்ப்பிர மாண்ட மாகச் செய்யும் வல்லவா நீங் னைத்த வாறே யெல்லாம் 7 என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குவர். இந்த உண்மை யினையே இன்றைய அறிவியலறிஞர்கள் புலனுணர்வைப் பன்மடங்கு பெருக்க வல்ல கருவிகளைக் கொண்டு விளக்கு கின்றனர். நாம் காணும் பொருள்கள் யாவும் அணுத்திர ளைகளே (Molecules) யன்றி வேறொன்றுமில்லை என்பதை விளங்க உரைத்தனர். இதனையே அம்பலத்தில் ஆடும் ஆனந்தக் கூத்து விளக்குகின்றது. அணுவிலும் இந்த ஆனந்தக் கூத்தையே நாம் காண்கின்றோம். - பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையினைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லைக் கண்டேனே ? என்று மணிவாசகப் பெருமான் விஞ்ஞானத்தையும் மெய்ஞ் ஞானத்தையும் ஒருங்கே காண்கின்றார், இந்தத் திருக் கூத்தையே சேக்கிழார் பெருமானும், 27. தாயு. பாடல்-தந்தைதாய்-6 28. திருவா-கண்டபத்து-10