பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலுார் மே வியே புண்ணியன் ன்ை நாயகருடைய திருக்கோயிலுக்கு முன் நின்று அவர் கண்ணே மூடியபடியே தியானம் செய்து கொண்டிருந்தார். சற்றுத் தூரத்தில் யாரோ இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த் தால் அரசனுடைய ஏவலாளரைப் போலத் தோன்றி. னர். விநாயகரை வணங்கிக் கொண்டிருந்தவர் நல்ல வளப்பமான மேனி உடையவர். கண்ணில் நீர்வார் நின்றபடியே தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சிறிது போது ஆனவுடன் அவர் ஏதோ பாடத் தொடங்கினர். மெல்ல மெல்ல நிறுத்தி அந்தப் பாடலச் ச்ொன்னர். பாட்டு அப்போது அவர் புதிய தாகப் பாடியது. அதனுல்தான் மெல்ல மெல்லச் சொன்னுர். அவர் பாடலைச் சொல்லியபோது அருகே நின்ற வர்கள் அதைக் கூர்ந்து கவனித்தார்கள். அந்தப் பக்கமாக ஓர் அழகிய பெண் வந்தாள்; திருக் கோயிலுக்குப் போவதற்கு முன் விநாயகரைத் தரிசிக்கும் முறைப்படி இங்கே வந்தாள். சந்நிதியில் நின்றிருந்த அன்பரைக் கண்டாள். அவர் ஏதோ பாடலைச் சொல்லுகிருர் என்பதையும் உணர்ந்தாள். அதை உற்றுக் கேட்கத் தொடங்கிள்ை. பாட்டை அவர் மெல்லச் சொல்லிக்கொண்டே போளுர்: