பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வாருங்கள் பார்க்கலாம் "ஆ; கண்டேன்; நாவில் நீர் சுரக்கக் கண்ட்ேன்' என்றேன். எஇதைப் பார்த்தால் உனக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?’ என்று கேட்டார் அவர். மாம்பழ ஸர்பத்து நினைவுக்கு வருகிறது: என்றேன். . - - அவர் சிரித்துக் கொண்டார். மாம்பழத்தைப் பறித்துப் பிழிந்து வயிற்றுக்குள் போடுவதே ஞாபக மாக இருக்கிருயே. இந்த மதி மாவிலையின் நுனி வழியாகத் தாமரையில் ஒழுகுகிற இந்தக் காட்சி எதைப்போல் இருக்கிறது ? யோசித்துப் பார்” என்ருர் அவர். r ● அதற்கு நான் கவி அல்லவே, நீங்களே சொல் லுங்கள்.உங்களுக்குத்தான் ஆந்த வன்மை உண்டு' என்று பணிவாகக் கேட்டுக்கொண்டேன். அவர் சொல்லத் தொடங்கினர்: "நாம் போகிற ஊருக்குள்ளே நிகழும் நிகழ்ச்சியை இது நினைப்பூட்டுகிறது. ஊருக்குள் தீ வளர்த்து மாவிலேயால் நறு நெய்யை எடுத்து ஆகுதி செய்கிறர்கள். ஊரின் அகத்தே அவர்கள் செய்யும் செய்கையைப் புறத்தே உள்ள இந்த மரங்கள் நினைப்பூட்டுகின்றன. இந்த மரங்கள் கனி கிழிந்த மதுவாகிய நறு நெய்யை இலேயின் துணி வழியாகத் தீயைப் போலச் சிவந்திருக்கும் தாமரை யில் பெய்கின்றன. அதையும் இதையும் ஒப்பு நோக்கிப் பார்த்தால், இந்த ஊருக்கு அகத்தழகும் புறத்தழகும் எவ்வளவு நயமாகப் பொருந்தி யிருக் கின்றன என்று தெரியவரும்'.