பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {4 வாருங்கள் பார்க்கலாம் அவனுடைய முகத்தில் பால் வடிந்தது; தேசு திகழ்ந்தது. அவன் சிறுவனுக இருந்தாலும் சில சமயங்களில் தந்தையுடன் மந்திரங்களைச் சொல்லும் போது கணிர் என்று சொன்னன். அவனுடைய முகப் பொலிவையும் சுறுசுறுப்பையும் வாக்கின் வளத்தையும் அரசர் கவனித்தார். அவருடைய உள்ளம் அவன்பால் சென்றது.

  • சிவாசாரிய சுவாமிகளே, இந்தக் குழந்தை யார் ?’ என்று கேட்டார் அரசர். - - - "இவன? இவனத் தெரியாதா உங்களுக்கு? இவன்தான் என்னுடைய பிள்ளை ஆரூரன்.”

“இதுவரையில் இவனே நான் கண்டதில்லையே! நல்ல புத்திசாலியாக இருப்பான் போல் இருக்கிறதே! அர்ச்சனைகள் எல்லாம் நன்ருக வருமா? ‘நன்ருகச் சொல்வான். கொஞ்சம் அலங்காரப் பிரியன். இறைவன் திருவருளால் முன்னுக்கு வர வேண்டும். இன்னும் பூணுால் போடவில்லை. போட்ட பிறகு வேதமும் ஆகமமும் பயிலச் செய்ய வேண்டும்.’ * - அன்று முதல் நரசிங்க முனையரையருக்கு அவன் மேல் ஒரு கண் இருந்து வந்தது. அவனைத் தம் அருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எழுந்தது. "ஆதிசைவர் குலத்திலே பிறந்த குழந்தையை நாம் எப்படி அழைத்துச் செல்வது? என்ற எண்ணம் இடையிடையே தோன்றினுலும் ஆசை தளரவில்லை. சில சமயங்களில் அரசர் குதிரை மீது ஏறி வருவார். அப்போது அந்தச் சிறுவனயும் குதிரையின்மேல் ஏற்றிக்கொண்டு சிறிது. தூரம் போய்வருவார்.