பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் a 129 வாத்தியங்கள் எல்லாம் சேர்ந்து கடல் முழங்குவது போல முழங்கின. மகளிர் கீதம் பாடினர்கள். இந்த அழகான கூட்டத்தினிடையே நம்பியாரூரர் திரு மணம் நிகழவேண்டிய சடங்கவி சிவாசாரியாருடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போதுதான் முன்னே சொன்ன கிழவர் ஏதோ குறை உடையவரைப் போல விரைந்து கொண்டிருந்தார். அவருடைய நெற்றியில் திருநீறு பளிச்சென்று தோன்றியது. உடம்பெல்லாம் நரை. காதில் ருத்திராட்சங்களைத் தொங்கவிட்டிருந்தார். மார்பிலே பூணுரல் அசைந்தது. உத்தரியம் தோளில் நுடங்கிக் கொண்டிருந்தது. கையில் ஒரு தாழங் குடையை வைத்திருந்தார். எத்தனையோ காலமாகத் தோய்த்து நீர்க்காவியேறிய ஆடையைப் பஞ்ச கச்ச மாக உடுத்திருந்தார். கையில் உள்ள மூங்கில் தடி யில் சிறிய துகில் ஒன்றும் தருப்பையும் முடிந்திருந் தார். தள்ளாடி நடந்தாலும் அதிலும் ஒரு வேகம் இருந்தது. ‘அழகு முதுமை பெற்ருல் இப்படித்தான் இருக் குமோ? அல்லது முதுமை என்பதற்கே இதுதான் உரு வ்மோ? வைதிகம் தோன்றிய மூல மூர்த்தி இவர் தாமோ? இவரைப் பார்த்தால் அழகு, முதுமை, வைதிகம் எல்லாம் ஒன்ருய்க் கலந்த திருக்கோலமாக இருக்கிறதே! என்று கண்டவர் அதிசயிக்கும்படி இருந்தார் அந்தக் கிழவர். மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ அத்தகைய மூப்பெனும் அதன்படிவ மேயோ வா. பா. - 9.