பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 139. சிறப்பின் மிக்க அர்ச்சனே பாட்டேயாகும். ஆதலால் நீ இவ்வுலகில் உள்ள மட்டும் தமிழ் பாடுவாயாக!' என்று இறைவன் அருளினுன். வேதியராக எழுந்தருளி வழக்கினல் வெல்ல வந்த பாக்கியத்தை அறியாத ஏழையாகிய எனக்கு உணர்வு தந்து உய்யக்கொண்ட கோதிலா அமுதே! உன்னுடைய கல்யாண குணங்கள் அளப்பரிய கடல் போன்றவை. அவற்றில் இந்த எளியேன் எதை அறிந்திருக்கிறேன் ? நான் உன்னே எப்படி அறிந்து என்ன பாட முடியும்?' என்று உருகினர் சுந்தரர். "அப்பா, நீ என்னைப் பித்தன் என்று சொன்னு யல்லவா ? அப்படியே என்னே வைத்துப் பாடு” என்று இறைவன் கூறினன். இறைவன் அருள் முன்னின்று இயக்கும்போது பாட்டு வெள்ளம்போல் வராதா ? இறைவனுடைய காட்சியிலே இன்பம் பெற்று மெழுகாகக் குழைந்து, நின்ற சுந்தரர் உள்ளம் பழுத்த பழம் போலாகி விட்டது. கனிந்து சாறு ஊறும் கனியாகிவிட்ட அதிலிருந்து அந்தத் தேற்ல் கவியாக வழிந்தது. பாடத் தொடங்கிவிட்டார் : பித்தா, பி சூடி, பெரு மா ன அா எாளா, ரத்தால் மற வாதேகிக்னக் கின்றேன்மனத்து உள்ளே கவத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் கல்லூர் அருட் டுநையுள் அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் என லாமே ?