பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் நல்லூர்ப் பித்தன் 145 மண்டபம் இருக்கிறது. அதற்கு வழக்கு வென்ற திரு வம்பலம் என்று பெயர். இறைவன் வழக்கிட்டு வென்ற சபையின் நினைவாக இதைக் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டினர்கள் என்று கல்வெட்டி உள் பிராகாரத்தில் தென்புறத்தில் சுந்தரருடைய உற்சவ மூர்த்தியின் சந்நிதி இருக்கிறது. பிற்காலத் தில் அமைத்த திருவுருவமாலுைம் அழகாக இருக் கிறது. சுந்தரர் தம் திருக்கையில் ஆவண ஒலயுடன் நிற்கிருர். பிராகாரத்தில் தெற்கே பொல்லாப்பிள்ளையார் எழுந்தருளியிருக்கிருர். இம்மூர்த்தி முழு உருவமாக இல்லை. புடைப்புத் திருவுருவத்தில் (:ேs-relief) காட்சி அளிக்கிருர். பொல்லாப் பிள்ளையார் என்ப தற்கு உளியில்ை செதுக்காத சுயம்பு மூர்த்தியாகிய பிள்ளையார் என்று பொருள். இவர் வலம்புரி விநாய கர்; அதாவது இவருடைய துதிக்கை வலப்பக்கத்தே சுருண்டுள்ளது. இந்த மூர்த்தி மிக்க அருட்பெருக்கு உடையவர். பதின்மூன்ரும் நூற்ருண்டில் உதித்தவரும் சைவ சித் தாந்தப் பெருஞ்செல்வமாகிய சிவஞான போதத்தை அருளியவருமாகிய ரீமெய்கண்ட தேவ நாயனர் இத்தலத்தில் பல காலம் வாழ்ந்தார். அவர் பொல் லாப் பிள்ளையாரை வழிபட்டு அருள் பெற்றவர். அவருடைய திருக்கோயில் இந்த ஊரில் இருக்கிறது. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத் துக்கு உரியதாகிய அத் திருக்கோயிலில் மெய்கண்ட தேவருக்குப் பூசை முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வா. பா, - 10.