பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:220 வாருங்கள் பார்க்கலாம் விளங்குவதைக் கண்டேன். அந்த ஒவியம் எழுதிச் சில நூறு ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும். திருவஞ்சைக்களத்தப்பனுடைய சந்நிதி உட் ஆயிராகாரத்தின் நடுவில் துண்டாகத் தனியே இருக் கிறது. அதன்மேல் விமானம் மரத்தால் அமைந்தது; தேரைப் போல இருக்கிறது. அதில் பலஉருவங்களைச் செதுக்கியிருக்கிருர்கள். செப்புத் தகட்டால், வேய்ந் திருக்கிருர்கள். ஒவ்வொரு மூலையிலும் நாகத்தின் உருவம் இருக்கிறது. பெரும்பாலும் மலேநாட்டுக் கோயில்களில் நாகம் இருப்பதைக் காணலாம். விமானத்திலும் கீழே சுவரிலும் மரத்தில் பல பல் வேலைப்பாடுகளையுடைய தூண்கள் இருக்கின்றன. சந்நிதியில் இரண்டு துவாரபாலகர்கள் நிற்கிருர்கள். கிழக்கு நோக்கி அஞ்சைக்களத்தப்பர் எழுந்தருளி யிருக்கிருர். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப் பெற்றவர் அவர். இப்பூவுலகத்தில் திருவவதாரம் செய்த சுந்தரர் உலகினின்று விடைபெற்றபொழுது கடைசியில் தரிசித்த மூர்த்தி அவர். சேரமான் பெருமாள் நாயனருடைய பேரன்புக்கு உரிய பெருமான் ; அவருடைய அன்பு மேன்மேலும் வளர் வதற்குக் காரணமான பிரான். கேரள ராஜ்யத்துக் கோயில்களில் ஒரு முக்கிய மான வேறுபாடு, சிவபெருமான் மாத்திரம் கோயில் கொண்டிருப்பது. தமிழ்நாட்டில் எந்தத் தலத்திலும் சுவாமி சந்நிதியும் அம்பிகை சந்நிதியும் இருக்கும். "யூரீமீனுட்சி சமேத சுந்தரேசுவர சுவாமி” என்று இருவர் திருநாமங்களையும் இணைத்துச் சொல்வது வழக்கம். ஆனல் கேரள ராஜ்யத்தில் உள்ள கோயில் களில் அம்பிகை பெரும்பாலும் இருப்பதில்லை. தனியே