பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 225 அனுப்புவாரா? மதுரைக் கோயில் ஸ்தானிகரும் பட்டருமாகிய ரீசுந்தரேச பட்டரவர்களே ரீமீனுட்சி தரிசனம் செய்து கொண்டவர்கள் அறிவார்கள். "திருவாதவூருக்கு வந்து விட்டேன். இனிமேல் இங்கே உள்ள சிறப்புகளையெல்லாம் காட்ட வேண் டியது உங்கள் கடமை' என்று பாரத்தை அவரிடம் ஒப்பித்து விட்டேன். என் அருகில் தம்முடைய கருவிகளுடன் போட்டோக் கலைஞர் ரீராமகிருஷ்ணு அடிக்கடி வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந் 'தார். - X என்ன, ஆகாசத்தைப் பார்க்கிறீர்கள்? அந்தப் பாஸ்கரன் சுட்டெரிக்கிருனே என்ரு?" என்று கேட் டேன். "மேகம் இருக்கிறதா என்று பார்த்தேன்” என்ருர் 'ஏன், மழை வந்து விடுமோ என்ற பயமா?' என்று கேட்டேன். . 'இல்லை இல்லை: க்ளெளட் எஃபெக்ட் (Cloud effect) வேண்டுமல்லவா? "முதலில் எங்கே போகலாம்? கோயிலுக்குள் போகலாமா?” என்று பட்டரவர்களைக் கேட்டேன். "வாருங்கள், முதலில் அந்த விஷ்ணு தீர்த்தத் தைப் பார்த்துவிட்டுவந்து விடலாம்.' கோயிலுக்கு எதிரே நின்றுகொண்டு பேசு கிருேம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். கோபுர வாசலுக்கு அருகில் ஒரு கொட்டகையில் உற்சவ மூர்த்தி எழுந்தருளியிருந்தார். அவரை முதலில் சேவித்துக் கொண்டோம். - விஷ்ணு தீர்த்தம் என்பது ஓர் ஏரி, பாண்டி நாட்டு மொழியில் கம்வாய் என்று சொல்லவேண்டும், கா.வா. 15