பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 227 இந்தத் தீர்த்தம் உண்டான கதை விரிவாகப் புராணத்தில் இருக்கிறது. வேதத்தை இழந்த திருமால் இந்தத் தலத்தில் இருந்த வேதநாயகனச் சுற்றி நீருருவமாக நின்று வழிபட்டாராம், அதல்ை இதற்கு விஷ்ணு தீர்த்தம் என்று பெயர் வந்ததாம். பின்பே கோயில் முதலியவை ஏற்பட்டனவாம். தர்மபுத்திரர் யாகம் செய்தபோது யாக பூமியைத் தூய்மைப்படுத்திய அந்தப் புருஷாமிருகமே கண்ண பிரானுடைய விருப்பத்தின்படி இங்கே வந்து இந்தத் தீர் த் த த் ைத த் தூய்மைப்படுத்தியதாம். இது புராண வரலாறு. இங்கே திருக்கோயிலில் கோபுர வாசல் நிலையிலும் வடப் பக்கத்து உச்சியில் புருஷா மிருகத்தின் உருவம் இருக்கிறது. இப்போது இதற்குப் பூசை நடப்பதுண்டா ?” என்று கேட்டேன். . மழை இல்லாமல் இருந்தால் நூறு தேங்காயை யும் வேறு பொருள்களையும் கருக்கி இந்தச் சிலையின் மேல் பூசி விடுவார்களாம். இரண்டு மூன்று நாட் களில் மழை பெய்துவிடுமாம். இப்போதும் இந்த வழக்கம் இருக்கிறதாம். வானம் கறுத்து மழை பெய் வதற்கு இத்த வடிவம் கறுக்கும்படி செய்கிருர்கள். இந்த ஊரில் உள்ள தீர்த்தம் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவமாக இருக்கிறது. ஏரி, குளம்,நடை வாவி, கிணறு என்ற நான்கு வகை நீர்நிலைகளும் நான்கு தீர்த்தங்களாக இருக்கின்றன. ஏரிதான் விஷ்ணு தீர்த்தம். கோயிலுக்கு எதிரே ஒரு குளம் இருக்கிறது. அதை அக்கினி தீர்த்தம் என்கிருர்கள். வெளிப் பிராகாரத்தில்துழைந்தவுடன் இதன் பக்கத்