பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 வாருங்கள் பார்க்கலாம் பகல் போய் இரவு வந்தது. நட்சத்திரங்களாகிய எழுத்துக்களைப் பொறித்த வானமாகிய ஏட்டை இரு ளென்னும் மையைத் தடவி நிலாவென்னும் வெள் ளேத் துணியால் துடைப்பதற்குக் கடல்மீதே எழுந் தான் சந்திரன். சேய தாரகை வருணமாத் தீட்டிய வானம் ஆய ஏட்டினை இருளெனும் அஞ்சனம் தடவித் தூய வாள்கிலா என்னும்வெண் தூசில்ை துடைப்பான் பாய வேலையில் முளைத்தனன் பனிமதிக் கடவுள். (சேய-தூரத்தில் உள்ள தாரகை-நட்சத்திரம். வருணம்-எழுத்து. அஞ்சனம்-மை. வாள்-ஒளி. தூசு-துணி. பாய வேலையில்-பரந்த கடலில்.) பாண்டியனுடைய குதிரைப் பந்தியில் கட்டப் பெற்றிருந்த நரிக் குதிரைகள் யாவும் மீண்டும் நரி களாகி விட்டன. இரவிலே மயங்கிப் பகலிலே தெளிவு பெறுவது உலகியல். இறைவன் அருட் செயல் நேர்மாருக விளேகிறது. பகலிலே உருமாறிய நரிகள் இரவிலே சுய உருவங்களே எடுத்தன. அவை தமக்குள்ளே பேசிக் கொண்டனவாம். "நாம் நம் முடைய சொந்த இடத்தில் எவ்வளவு சுகமாக வாழ்ந்துகொண் டிருந்தோம்! சுடுகாட்டில் சங்கும் பறையும் ஒலிப்பது எவ்வளவு இனிமையாக இருக்கும்: பெண்கள் அழுகுரலிசையைக் கேட்காத காதும் ஒரு காதா? இங்கே அந்தச் சங்கீதங்களே இல்லை. மகா