பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 26; ஒவ்வொருநாளும் முதலில் சொக்க நாயகனே நினைந்து நிவேதனம் செய்த பிறகே வியாபாரம் செய்யத் தொடங்குவாள். இந்த வந்திக்கும் அரசாங்கத்தார் எல்லே 'கோலிக் கொடுத்துக் கரைபோடும்படி சொன்னர்கள். அவளுடைய பங்கை அடைப்பதற்குக் கூலியாள் யாரும் கிடைக்கவில்லை. அதனுல் மிக வருந்திய கிழவி, "நான் என்ன செய்வேன்!” என்று வாடிச் சொக்கநாதனே நினைந்து பிரார்த்தித்தாள். சுவாமி, பிட்டு விற்று ஜீவனம் செய்யும் இந்த ஏழையேன் உன் அருளால் சிறிதும் துன்பம் இல்லாமல் சூரியன் எங்கே உதித்தால் என்ன என்று சுகமாக வாழ்ந் தேன். இப்போது மன்னவன் இட்ட கட்டளையினுல் எனக்கு ஒரு தொல்லே வந்திருக்கிறதே! எனக்குச் சுற்றமோ, குழந்தையோ, துனேயோ, யாரும் இல்லே. இந்த அகதிக்கு இந்தத் துன்பம் வருவது நியாயமா அப்பனே? என் பங்கு அடைபடாமல் இருந்தால் காவலாளர் வந்து சீற்றங்கொண்டு கண்டிப்பார்களே! வேலை செய்பவன் ஒருவனையும் காணவில்லையே!” என்று கண்ணிர் வாரக் கதறினுள். . அப்போது இறைவன் அன்புடைய வந்திக்குத் துணை செய்யும் பொருட்டுக் கூவியாளாய்ப் புறப்பட் டான். இடையிலே அழுக்கேறிய பழைய துணி ஒன்றை உடுத்து, தலேயின்மேல் அன்பர் சாத்தும் இண்டை மாலேயைப் போன்ற சும்மாட்டை வைத்து, அதன்மேல் ஒரு கூடையைக் கவிழ்த்து, திருத் தோளின்மேல் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.