பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 வாருங்கள் பார்க்கலாம் பலஞ்சேரும் நாளில் கனக சபைதனில் பாக்கலெலாம் கலஞ்சேர வேமுகித் தானெங்கள் ஆளுடை நாயகனே என்றும், கண்காண வேமுகித் தாள்யோக காயகக் காரிகையே என்றும் முடிகின்றன. இந்த நாட்டில் இறைவனுடைய திருவருள் ஒன்றையே பெற வேண்டுமென்று கருதி மன்னரும் செல்வரும் பெரிய ஆலயங்களை எடுத்தும் மண்டபங் களே நிறுவியும் வழிபட்டிருக்கிருர்கள். ஆணுல் அந்தத் திருப்பணிகளைத் தாங்கள் செய்ததாக விளம் பரப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு ரூபாய்க்குத் தாம்பாளம் வாங்கி இரண்டு ருபாய் கொடுத்துத் தம் முடைய பட்டங்களையும் பெயர்களையும் பொறிக்கச் செய்யும் இந்த விளம்பரயுகத்தில் தம் பெயரை வெளிப்படுத்தாமல் மோனத்தொண்டு .ெ ச ய் த அந்தப் பெரியார்களின் பெருமை பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது. இந்தக் கனக சபை மண்டபத்தில் பாவு கல்லேப் பரப்பின புண்ணியவான் யாரோ, நாம் அறியோம். ஆளுல் எல்லாம் இறைவன் திருவருளால் நிறைவேறு கின்றன என்ற நம்பிக்கையும், நாம் செய்தோம் என்ற எண்ணத்தை அறவே மறந்த அடக்கமும் கொண்ட அவர்கள், "இந்த மண்டபத்தை விநாயகன் கட்டி முடித்தான்; வேலவன் கட்டி முடித்தான்; மாணிக்க