பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 வாருங்கள் பார்க்கலாம் புராணம் பாட வந்த நீங்கள் முதலில் சிதம்பரம் நடராஜரைத் துதிப்பது எதற்கு ?” என்று அவர் வினவினர். சிவஞான முனிவர் சிதம்பரத்தின் சிறப்பையும், நடராஜப் பெருமான் பெருமையையும் எடுத்துரைத்துச் சமாதானம் சொன்னர். ஒதுவார் அவர் சொன்ன சமாதானங்களே ஏற்றுக் கொள்ள வில்லை. “சிதம்பரம் சிறந்த தலமாக இருக்கலாம். நட ராஜாவும் சிறந்த மூர்த்தியாகலாம். ஆனுல் காஞ்சீ புரத்தின் பெருமையை விரிவாகச் சொல்ல வந்த இடத்தில் அவரை முதலில் வைத்துப் பாட நியாயம் இல்லை' என்று மீட்டும் தம் தடையை வற்புறுத்திச் சொன்னுர். சிவஞான முனிவர் அவரை எப்படி மடக்குவது என்று சற்றே தடுமாறியபோது அவ ருடைய மாணுக்கராகிய கச்சியப்ப முனிவர் தம் ஆசிரியரிடம் ஏதோ சொல்லிவிட்டு அந்த ஒது வாரைப் பார்த்துப் பேசலானர். நீர் யார் ? என்ன படித்திருக்கிறீர்? இந்தத் தடைகளைச் சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேட்டார். - “நான் இவ்வூரில் உள்ள ஒதுவார்களில் ஒருவன். தேவாரம் தெரிந்தவன். சைவ சம்பிரதாயம் தெரிந்தவன்.” "அப்படியா? அப்படியால்ை எங்கே, இந்தத் தலத்துத் தேவாரம் ஒன்றைச் சொல்லும் பார்ப் போம்.” ஒதுவார் தம்முடைய திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு வந்திருக்கிறதென்ற களிப்பினுல் கனத்துக் கொண்டு தேவாரம் சொல்லத் தொடங் கினர். தேவாரம் எப்போது யார் சொன்னலும்