பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம் 337 கிறது. அது குரு நமசிவாயர் என்பவருடைய சமாதி என்று:சொன்ஞர்கள். இந்த இரண்டையும் தாண்டி முன்னே சென்ருல் இலவ மரங்களின் நிழலிலே ஒரு சிறிய ஆலயம் இருப்பதைக் காணலாம். "இங்கேதான் மாணிக்கவாசகர் தங்கியிருந் தார்’ என்று சொன்னர்கள். "இந்தக் கோயிலுக்கு என்ன பெயர்?' என்று கேட்டேன். "ஆவுடையார் கோயில் என்றும் ஆத்மநாதர் கோயில் என்றும் வழங்கும்” என்று அன்பர்கள் சொன்னர்கள். இந்தக் கோயிலுக்குள் திருப்பெருந்துறையைப் போலவே, உள்ளே சிவலிங்கம் இல்லை. வெறும் பலி பீடத்தையே வைத்துப் பூசிக்கிஞ்ர்கள். வீர சைவர் கள் இந்தக் கோயிலப் பூசித்துப் பாதுகாத்து வரு கிருர்கள். இதனை அடுத்துச் சிறு கோயிலில் சிவ யோக நாயகி சந்நிதி இருக்கிறது. ஆவுடையார், கோயிலில் உள்ளது போலவே அங்கும் பீடம் மாத்திரம் இருக்கிறது. மாணிக்கவாசகர் திருவருள் பெற்ற, திருப்பெருந்துறையை நினைந்து, இங்கும் ஒரு சிறிய திருப்பெருந்துறை அல்லது ஆவுடையார் கோயில் யாரோ பெரியவர்கள் அமைத்திருக்கிறர் கள். மணிவாசகர் இருந்த இந்த இடத்தில் தனியே அவருக்குக் கோயில் இருந்திருக்க வேண்டும். இப் போது காண்க் கிடைக்கவில்லே. ஆனுல் இந்தக் கோயிலுக்கு வெளியிலும் உள்ளும் மணிவாகக ருடைய திருவுருவத்தைக் கண்டேன்.