பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 வாருங்கள் பார்க்கலாம் சிற்றம்பலவன் உருவம் என்கிருர்கள். இவை இரண் டும் தனிக் கோயில்களில் முன்பு இருந்திருக்க வேண் டும். கோயிலை யாரோ சிதைத்துவிட்டமையில்ை உருவங்களைப் பிற்காலத்தில் இங்கே கொண்டு வந்து வைத்தார்கள் போலும்! மாணிக்கவாசகர் இடக்கையில் சுவடியை வைத்துக் கொண்டிருக்கிருர் வலக்கையை உயரே துரக்கிக் காட்டுகிருர். திருவாசகத்தின் பொருள் யாது என்று கேட்டவர்களுக்கு இவரே என்று நடராஜப் பெருமானேக் காட்டும் கோலத்தை நினைந்து சிற்பி வடித்த திருவுருவம் போலும் கையில் சுவடி இருப்பதால் நிச்சயமாக இம்மூர்த்தி மாணிக்க வாசகர் என்பதில் ஐயம் இல்லை. மூர்த்திகளே எல்லாம் வணங்கிவிட்டுப் புறப் பட்டேன். திருவாசகத்தின் மூல ஏடு ஏதோ ஒரு மடாதிபதி யிடம் இருப்பதாகவும், அந்த மடத்திற்கு அம்பலத் தாடிகள் மடம் என்று பெயர் என்றும் சிலர் சொல்லி முன்பே கேட்டிருந்தேன். ஆதலால் அந்த மடத்தைப் பற்றி விசாரித்தேன். முதல் முதலில் அம்பலத்தாடி மடத்திற்குச் சென்று பிறகே திருப்பாற் கடல் மடத்திற்குப் போனேன். ஆலுைம் அங்கே கண்டவற்றை முன்னலே சொன்னல்தான் வரலாறு