பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - வாருங்கள் பார்க்கலாம் சோடச கலாலிங்கம். இப்பெருமானுக்குப் பின்னுல் கர்ப்பக்கிருகச் சுவரில் உமாபாகருடைய திருவுருவம் இருக்கிறது. கர்ப்புக் கிருகத்துக்குள் இவ்வாறு எம்பெருமான் உமா தேவியாரோடு எழுந்தருளி யிருக்கும் தலங்கள் வேறு சில உண்டு. வேதாரணி யத்தில் பார்க்கலாம். அநேகமாகத் திருமணம் நடந்ததாக எங்கெங்கே பழஞ் செய்தி வழங்கு கிறதோ, அங்கே இந்த அமைப்பைக் காணலாம். இங்கே வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் திருத்தேர் விழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோம வாரங்களில் பக்தர்கள் அதிகமாக இத்தலத் துக்கு வந்து வழிபடுகிருர்கள். மூன்ருவது சோம வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். கோயில் உள்ள இடத்துக்கு வடகைலாசம் என்று பெயராம். திருவதிகையின் ஒரு பகுதி இது. நில வரிக்கணக்கில் இந்தப் பெயர் பதிவாகி யிருக்கிற தென்று சொல்கிருர்கள். நான் திருவதிகையைப்பற்றிய செய்திகளே.விசா ரித்துக் கொண்டிருந்தபோது ஒர் அன்பர், “நீங்கள் வேகாக் கொல்லையைப் பார்த்திருக்கிறீர்களோ?” என்று கேட்டார். - "அது எங்கே இருக்கிறது ?” - "இங்கிருந்து தெற்கே ஏழு மைல் தூரத்தில் ஒ ஊர் இருக்கிறது’ . “அதற்கு ஏன் அப்படிப் பேர் வந்தது ? இங்கே உள்ள மண்ணேப் பாருங்கள். சிவப் பாக இருக்கிறது அல்லவா? இது சுட்ட மண். சுடாத மண் அது. வேகாத இடம் அது. ஆதலால்