பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை. இந்த வால்டையர் சரித்திரமானது பிரபல பகுத்த றிவு வாதியாகிய தோழர், ராபர்ட் இங்கர்சால் அவர்களால் எடுத்துக் கூறியதை அனுசரித்து சுயமரியாதை இயக் கத் தோழரும், அறிஞருமாகிய தோழர் K. M. பால சுப் பிரமணியம், B. A, B. L., அட்வொகேட், அவர்களால் அழகிய தமிழ் நடையில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். வால்டையர் அவர்கள் சரித்திரத்தை படித்துப்பார் த்தால் அதில் வால்டையர் ஒரு நாஸ்த்திகர் என்னும் காரணத்திற்காக அவர் எவ்வளவு சஷ்டத்துக் குள்ளாக் கப் பட்டார் என்பதும், நாஸ்திகர்கள் இடத்தில் எவ் வளவு அன்பு, பரோபகாரம், வீரம், உண்மை ஆகிய குணங்கள் மலிந்து கிடந்தன என்பதும், மத பக்தர்கள் இடத்தில் எவ்வளவு கொடுமை, துவேசம், அக்கிரமம் ஆகியவை நிறைந்து கிடந்தன என்பதும் விளங்கும். அன்றியும் இன்றும் உலகில் எவரிடம் அன்பு, நீதி, பரேரபகாரம் ஆகிய குணங்கள் உண்மையாகக் காணப் பட்டிருந்தாலும், காணப்படுவதாயிருந்தாலும் அவை பெரிதும் வால்டையர் போன்ற நாஸ்திகர்கள் உலகாயித மதக்காரர்கள் என்பவர்களிடத் திலேயே விளங்குகின் றதே அல்லாமல் மதாச்சாரிகள், மதப் பிரசாரகர்கள், மதத் தலைவர்கள் ஆகியவர்களிடத்தில் அருமையிலும் அருமையாக இருப்பதைக் காணலரம்.