உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஏக்கர்: 1967-க்கு முன்பு 6 - 4-60-இல் உச்ச வரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது ; அந்தச் சட்டம் வந்த பிறகு, ஏழாண் டுக் காலத்தில் உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது-24,194 ஏக்கர்; இதிலே அரசு கைப்பற்றியது - 16,330 மற்றவர்களுக்கு ஒப்படை செய்தது எதுவுமே இல்லை; உபரி நிலம் யாருக்கும் வழங்கப்படாத காரணத்தால் பயனடைந் தவர்கள் யாரும் இல்லை! - தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நற்சான்று 62,682 1967-க்குப் பிறகு உபரி நிலமாக அறிவிக்கப்பட்டது 1,08.068 ஏக்கர்; அதிலே அரசு கைப்பற்றியது 88,146 ஏக்கர்; நிலமற்றவர்களுக்கு ஒப்படை செய்தது ஏக்கர்; பயனடைந்த உழவர் பெருமக்கன் 38,504 பேர்; இதுதான், '15 ஸ்டாண்டர்டு ஏக்கர்' என்ற உச்சவரம்புச் சட்டத்திற்குப் பிறகு நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் காரணமாக ஏற்பட்ட பயன்! அந்தச் சட்டத்தை 15 2-70-இல் கொண்டுவந்தேரம்; அந்தச் சட்டத்திற்குப் பிறகு நாம் எடுத்த வேகமான நடவடிக்கைளின் காரணமாக 62.682 ஏக்கர், நிலமற்றவர் களுக்கு ஒப்படை செய்யப்பட்டிருக்கிறது. அகில இந்திய ஆளும் காங்கிரசுக் கமிட்டி கூட ஒரு நல்ல மதிப்புரையை- இந்தியாவிலேயே நில உச்சவரம்பில்-- நிலச் சீர்திருத்தத்தில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முன்னணி யில் நிற்கிறது' என்ற நற்சான்றை அளித்திருக்கிறது! பழத் தோட்டங்களுக்கு விதிவிலக்கு கே. டி. கே. தங்கமணி அவர்கள், 'இதிலே பழத் தோட்டங்களுக்கு இருக்கின்ற விதிவிலக்கை நீங்கள் இன்னும் எடுக்கவில்லையே' என்று கேட்டார். எல்லாப் பழத் தோட்டங்களின் விஸ்தீரணமும் 18,169 ஏக்கர்தான்; பழத் தோட்டங்களை உச்சவரம்பின் கீழ்க் கொண்டுவந்தால், அதனுடைய உற்பத்தி கெடும் - வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாவதும் கூடக் கெடக்கூடும் என்பதற்காகத்தான் விஸ்தீரணமும் குறைவாக இருப்பதால் விட்டுவிட்டோம்! -