உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தரிசு நிலங்களை ஒப்படை செய்தல் 'தரிசு நிலங்களை ஒப்படை செய்ய வேண்டும்' என்பது தலைமையமைச்சரின் ருபது அம்சத் திட்டங்களிலே ஒன்றாகும். நாடு சுதந்தரம் பெற்ற 1947-லிருந்து 1967 வரை தமிழகத்தில் ஒப்படை செய்யப்பட்ட நிலம் 2,88,000 ஏக்கர்; பயனடைந்தவர்கள் 1,15,000 பேர். 1967-க்குப் பிறகு இந்த எட்டாண்டுக் காலத்தில் நாம் ஒப்படை செய்த நிலம் 7,19,000 ஏக்கர்; பயனடைந்தவர்கள் 3,69,000 Gur! உச்சவரம்பில் பினாமி முறை இந்த உச்சவரம்பில் பினாமி எல்லாம் நடந்து விடுவதாக மாரிமுத்து சொன்னார்; ஒன்றிரண்டு நடந்தது; இன்னும் சில, அந்தக் காலத்திலேயே நடந்துவிட்டது; ஒரு முக்கிய மான அமைச்சரின் சொந்தக்காரரேகூட- நான் பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை-அதாவது, 6-4 - 60-இல், 282 சாதாரண ஏக்கர் -- அதாவது 141 ஸ்டாண்டர்டு ஏக்கர் இருந்தது; ஆனால் 2-10-62-க்குள் இந்த 141 ஸ்டாண்டர்டு ஏக்கரில் 135 ஸ்டாண்டர்டு ஏக்கரை, அந்த ‘அமைச்சருக்குச் சொந்தக்காரர்' விற்றுவிட்டார்; உச்சவரம்புச் சட்டத்தி லிருந்து தப்பித்துக் கொண்டார்! கூ, - - இந்த இரண்டாண்டுக் காலத்திற்குள் 6-4-60-இலி ருந்து 2-10-62-க்குள் யாரும் இந்தச் சட்டத்தை ஏமாற்றி அவர்களுக்குரிய நிலத்தை விற்கக் கூடாது - என்று இருந்தும் 'பணம் வருகிறதே அப்பா' என்ற காரணத்தினால் 'உச்சவரம்பு வந்துவிடுமே அப்பா' என்ற அச்சத்தினால் அவர், 135 ஸ்டாண்டர்டு ஏக்கரை விற்று விட்டார் ; அதற்கு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; 1967-க்குள் நட வடிக்கை எடுத்திருக்க வேண்டும்: 1967 வரையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை ; 1967-க்குப் பிறகு-அண்ணா அவர்கள் தலைமையில் கழக ஆட்சி வந்த பிறகுதான்- அந்த தவறுக்கு நடவடிக்கை இந்த அரசின் சார்பில் எடுக்கப்பட் டிருக்கிறது.