உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 களும் - மாநில அரசுத் துறையில் 2,123 இடங்களும்-ஆக மொத்தம் 6,387 இடங்களும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கின்றன ; அதாவது, 107.45 சதவிகிதம் நாம் வரை யறுத்த இலக்கையும் மிஞ், படித்த இளைஞர்களுக்குப் பயிற்சித் திட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது. என் இதையெல்லாம் விளம்பரப்படுத்த வேண்டாமா?" று அனந்தநாயகி அம்மையார் அவர்கள் கேட்டார்கள். மைசூர் மாநிலத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது- 'இருபது அம்சத் திட்டம்' என்று பிரதமருடைய படத்தையும், முதலமைச்சருடைய படத்தையும் போட்டு விளம்பரம் படுத்தியிருக்கிறார்கள் ; இங்கே போட்டால்தான் பாவம்! அவர்கள் எல்லாம் போடலாம் இங்கே போட்டால், டெல்லிக்குத் தூதே போகும் ! -- ஆனால், மைசூரில் இதுபற்றி அவர்கள் தெரிவிக்கும் போது, "A specially designed training programme for about 1000 locally recruited persons during this year in.. selected growth centres in the State" என்று போடப்பட்டிருக்கிறது; அதாவது, அங்கே ஆயிரம் தான் - விளம்பரப்படுத்தப்பட்ட இடத்தில் ஆயிரம்தான் இங்கேயோ -6,387 ஆனால் நாங்கள், இருபது அம்சத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்று கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள்! ஆகும்; 4விளம்பரப்படுத்தவில்லை' என்று சொல்கிறீர்கள்-(விளம் பரத்தைக் காட்டி) - இதைவிடவா பெரிய விளம்பரம் செய்ய வேண்டும்? எவ்வளவு பெரிய விளம்பரம்? இந்த விளம் பரத்தில், நாங்கள் என்ன - பிரதமரை விட்டுவிட்டோமா? இதில் ஆரம்பத்திலேயே, 'பிரதமரின் பொருளாதாரத் திட்டங் களைப் பன்பற்றி' என்றுதான் தொடங்கியிருக்கிறோம் ; முடிக் கும்போதும், இந்த விளம்பரத்தில், 'பிரதமர் அறிவித்த எஞ்சிய திட்டங்களை நிறைவேற்றத் தமிழக அரசு பீடுநடை. போடுகிறது' என்றுதான் முடித்திருக்கிறோம் ! ஆக, இந்த இரண்டு பக்க விளம்பரத்திலும், நாம் என்னென்ன காரியங்களைச் செய்திருக்கிறோம் என்பதை அறி வித்திருக்கிறோம்.