உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 முதலமைச்சர்:-“நாடாளுமன்றத்தில், கம்யூனிஸ்டுக் கட்சிகூட ஒரு எதிர்க் கட்சிதான்; இந்தியக் கம்யூ னிஸ்டுக் கட்சிக்காரர்களை அவ்வளவு கண்ணியமற்ற வர்கள் என்று அனந்தநாயகி அவர்கள் கூறுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.' அனந்தநாயகி :-' கம்யூனிஸ்டுக் கட்சி எங்களுடைய தோழமைக் கட்சி. முதலமைச்சர்:-“இது, இரண்டாவது தாக்குதல் -- கம்யூனிஸ்டுக் கட்சிமீது பரவாயில்லை ! பின்வாங்கிட எங்களால் இயலாது! நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற தி. மு.க. மாநாட் டில், கழகத்தின் பொருளாளர் போசிரியர் முன்மொழிந்து- பொதுச் செயலாளர் நாவலர் வழிமொழிந்த தீர்மானத்திலும்‘ 66 “ இந்தியாவில் இன்றைக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை மாற்றியமைப்பதற்குத் தேவையான முயற்சி களை மேற்கொண்டு, இந்திய நாட்டு முக்கியத் தலைவர் களையும் -- முதலமைச்சர்+ளையும் கலந்து விவாதித்து-- பிரதம அமைச்சரைச் சந்தித்து--நாட்டு மக்கள் அனை வரும் மகிழததக்க ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர் களை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது. - இந்தத் தீர்மானம், செயற்குழுத் தீர்மானத்திற்கு எப் படிப் புறம்பானதாகும்? செயற்குழுத் தீர்மானத்தில் நாங்கள் கடைசியில் சொல்லி யிருக்கிறோமே- அண்ணாவின் பாதையில்--காந்தீய நெறியில் --அமைதியான முறையில்--சட்டம், ஒழுங்கிற்கு ஊறு நேரிடா வண்ணம் நாட்டிற்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்' என்று- செயற்குழுவில் போடப்பட்ட அத் தீர்மா னமதான் நெல்லை மாவட்ட மாநாட்டுத் தீர்மானம் வரையில் நீண்டிருக்கிறதே தவிர, அது ஒன்றும் பின்வாங்கிவிட்ட தீர்மானம் அல்ல!