உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மு. கருணா நிதி

வதுபோல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல் களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றி யது... பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது. இடிகள் பல இடிப்பதுபோல... மின்னல்கள்

பல மின்னுவதுபோல.... திடீரெனப் புயல் கிளம்பீ, பூகம்பம் ஏற்பட்டு, கடல்கள் குமுறி யெழுந்தது போல.... தட தட வென ஆட ஆரம்பித்தன, இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்க மிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்துபோய்... எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது.

து

கடவுள்--அந்தக் கற்பனைக் க பெயரால் ஏற் பட்ட தலைவிதி- தலைவிதிக்காளான சமுதாயம்- அந்த சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம்- அந்தச் சட்டத்தை முறைதெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள்! வாழ முடியாதவர்கள்!

பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு, காந்தாவின் முகத்தைப் பார்க் கத் திரும்பினான். அவன் கண்கள் அவனை யறியா மல் மூடிக்கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச்சாமி நிற்கவேயில்லை ; பைத்தியக் காரனைப் போல நடந்துகொண்டே யிருந்தான்.

க..

காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன் னத்தில் கைவைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந் திருந்தாள். 'திலோத்தமா' சினிமாப்பட விளம்பர வண்டி தெருவில் போய்க்கொண்டிருந்தது.

16