உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளையோ பிள்ளை!

ஞரே! பிரேமா என்ற சொல்லில் பிரணவ மந்திரம் பொதிந்து கிடப்பதாக வர்ணித்த புலவரே! மலை யுச்சியிலிருந்து மளாரெனக் குதித்து விட்டீரே!" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாள் பிரேமா. உண்மையாகவே கிண்டல் உள்ளக் கிளர்ச்சியாக மாறிவிட்டது.

ம்

பிரேமாவுக்கும் கண்ணபிரானுக்கும் திருமணம் நடைபெறுவதற்குமுன் குழந்தை பிறந்த கட்டம் வந்தது. பிரேமா ஒரு பெண் குழந்தையைப் பெற் றெடுத்தாள். ஆனால் பிரேமாவுக்கு இன்னும் மணமாகவில்லை.

திரு

பிரேமாவுக்கும் கண்ணபிரானுக்கும் திருமண மாகவில்லையே தவிர-கண்ணபிரானுக்கும் மீனாட் சிக்கும் விவாக சுபமுகூர்த்தம் முடிந்துவிட்டது.

தேசீய எழுத்தாளர் ஸ்ரீமான் கண்ணபிரான் அவர்களுக்கும் மயிலை பெரியபண்ணை ரங்க நாத அய்யங்கார் மகள் மீனாட்சியம்மாளுக்கும் மணமான செய்தி போட்டோக்களோடு வெளிவந்தது.

இந்த முகூர்த்தம் முடிவதற்குள் பிரேமா தனது காதலனுக்கு ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதினாள். வரதாச்சாரியார் மகன் வரதக்ஷணைப் பிரச்சினையில் நாட்டம் செலுத்தினான். மீனாட்சி யின் புகைப் படத்தில் மனத்தைப் பறிகொடுத் தான். அவளைப்பற்றிச் சொல்லோவியம் தீட்ட அயல்நாட்டுக் கவிதைகளில் ஏதாவது வர்ணனை கிடைக்குமோ என்று தேடிக்கொண்டிருந்தான். பிரேமாவின் கடிகங்கள்-அவளது கதறல்கள்,

34