ஏழை
மன்னர்களுக்கும் ராணிகளுக்கும் தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிஷங்கள் கூட ஒதுக்க முடியவில்லை. கடன் காரர் படையெடுப்பு; தயிர்க்காரி முற்றுகை; வ்வளவையும் சமாளித்து விட்டு.... இரவு, கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்ம வினையை நினைத்துப் புலம்பவும் - கடவுளை எண்ணி அழவும் போனதுபோக, மிச்சநேரத்தை எப்போ தாவது பயன்படுத்திக் கொள்ளலாம். க
ஏழை
அதுவும். அதிகம்.
அறு
சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் ஏழெட்டுக் குழந்தைகளுக்குக் குறையாது. ஏழா வது குழந்தை, முதல் குழந்தையைவிட வயதுதான் இனையதாயிருக்கும். கருணாம்பாளைப் போலக் காசைத் தூசியாக மதித்துக் கர்ப்பப் பையை மாற்றிப்போட வசதியா படைத்திருக் கிறார்கள் அந்தப் பரிதாப ஜந்துக்கள்!
இளமை தேயாதவன்- எழில் குறையாதவன் இப்பேர் பட்டவனைத்தான் பார்வதி கணவகைய பெற்றிந்தாள். அவன் 'மில்' வேலை முடிந்து ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருப்பான். அவனை வரவேற்று--உபசரிக்க - அவளுக்கு வேலை ஒழிய வில்லை. எஜமானுக்கும் எஜமானிக்கும் தேவை யான ஓய்வுக்காக - அந்த ஏழையின் இளம் மனைவி -பார்வதிதன் பருவ உணர்ச்சியைக் கட்டும் படுத்திக்கொண்டு பானுவைப் 'பார்க்கு’க்கு அழைத் துச் சென்றாள். ஒரு நாள்மட்டுமா ? இல்லை. நாள் தோரும் அவள் பெண்ணல்ல; இந்த உலகத்தில்
43