மு. கருணாநிதி
வளர்ச்சியடைவோருமுண்டு. அந்த வளர்ச்சி இன் னும் பார்வதியைப் பீடிக்கவில்லை. இதெல்லாம் அவருக்கு ரஷ்யப் பேச்சு என்பார் நல்லகண்ணுப் பிள்ளை ரஷ்யா என்றால் அவருக்கு விஷம் சாப்பிடு ம் கிற மாதிரி.
பார்வதி நன்றாக நினைந்துவிட்டாள். குழந் தைக்கு ஒரே பயம். அலற ரப
ம்
ஆரம்பித்துவிட்டது. மரத்தடியில் நின்றுவிட்டாள் பார்வதி. அவ்வளவு கஷ்டத்திலும், பயங்கரத்திலும் வரப்போகிற அந்த இன்ப வரவு. அவள் முகத்தில் தனித் தெளிவை அதிகப்படுத்தியபடி இருந்தது.
ல்
திடீரென்று அந்த மரத்தின்
து
பெரியகிளை
முறிந்து விழுந்தது. மழை நின்றுவிட்டது. புயல் ஓய்து விட்டது.
வி
நல்லகண்ணுப்பிள்ளையின் மோட்டார் வெகு வேகமாகச் சாலையில் பறந்துவந்தது.
முறிந்துகிடக்கும் அந்த மரத்தடியில்... 'பானு' என்று சப்தம் போட்டபடி இறங்கினார் பிள்ளை. யானு மயக்கமாய் கிடந்தது. தூக்கி மூர்ச்சை தெளி வித்தார் 'அப்பா' என்று கண் விழித்தது குழந்தை. காரில் குழந்தையோடு ஏறி உட்கார்ந்தார். கார் புறப்பட்டு விட்டது. டாக்டர் வீட்டை நோக்கி... மரத் தடியில் கிடந்த இன்றொரு உருவம் கண் விழித் தது...."அத்தான்.... அய்யோ..." நீண்ட பெருமூச்சு. கண்கள் மூடிக்கொண்டன. யார் அது ஏழை.
45