உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

"இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடெல்லாம் இப்படித்தான்....'

93

"சந்திரா! தினந்தினம் பூலோகத்துக்குப் போகி யே... அந்த மக்களிடம் இந்த ஒரு வார்த்தையை உபதேசம் செய்வாயா?'

" என்ன கங்கா?""

'கிழவனுக்குப் பெண் கொடுக்காதே! இரு தார மணத்துக்கு இணங்காதே! இதைச் சொல்வாயா?... என் பொருட்டுச் சொல்.... என்போன்ற பெண்கள் இனியும் தோன்றாமலிருக்க இதைச் சொல்....?

‘ஆகட்டும் கண்ணே... வா பிடரிப்பக்கம் போவோம். அங்கோன் இருட்டாயிருக்கும்"

"சந்திரனும் கங்காவும் மறைந்து விட்டார்கள். சற்று நேரத்தில் எம்பெருமான் திடுக்கிட்டு விழித் தார். பக்கத்தில் பார்வதி அசைவற்று உறங்கிக் கொண்டிருந்தாள். தலையைத் தொட்டுப் பார்த் தார். அப்போதுதான் அவசர அவசரமாகக் கங்கா ஓடிவந்து அங்கே உட்கார்ந்தாள்.