பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் முடியரசன் 21 போரில் புறங்கண்டேன்.பொன்னழகி என்னை வென்றாள்' என்று காதல் பூரிப்பில் காளை கூறுவதாகக் கவிஞர்கள் பாடுவதை நாம் மரபாகக் கேட்டுள்ளோம். முடியரசனோ, போரில் வீரத்தைக் காட்டிய என் புயத்திலும், தளிர் போன்ற மெல்லிய அடிகளால் மிதித்து என்னைத் தோற்கடித்து விட்டாயே என்று குழந்தையைப் பார்த்து பேசுகின்றார். கவிஞர் எப்போதும் குழந்தைகட்குத் தோற்றுவிடும் இயல்புடையவர்தான், அவர் மட்டுமா தோற்றார். மனித சமுதாய வளர்ச்சிக்கே இத்தோல்வி துணைநிற்குமாதலால் ஆயிரம் முறை - என் - பத்தாயிரம் முறை தோற்பதற்கு நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம். பிள்ளைப் பேறு இல்லாதவர்களையும் தந்தையாக மாற்றி மகிழச் செய்யும் இந்தப் பாமலர்கள் என்பதை அநுபவந்தான் காட்டும். 蕊 இயற்கைபற்றி : கவிஞர் இயற்கை பற்றி இயற்கைத் தாய் என்று பாடிய பாடல் அற்புதமானது. எவரும் கற்பனை செய்யாத கவிதை, தம்மைப் பெற்றெடுத்தவள் இயற்கைத்தாய் என்றும் தம் படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் என்னென்ன நல்கினாள் என்றும் கவிஞர் பதினொரு கவிதைகளில் கூறுகின்றார். தம் அன்னையின் பெயர் முருகு என்றும் அழகு கூறுவார். அவற்றில் மூன்று பாடல்கள் வருமாறு. தென்றலெனும் தொட்டிலிலே எனைக்கிடத்தித் தேன்.நுகர மலர்கள் தோறும் சென்றிருந்து தமிழ்பாடும் வண்டொலியால் செவிகுளிரத் தாலே தாலோ என்றினிய தாலாட்டில் துயிற்றிடுவாள் எழுந்தழுதால் ஆறு காட்டிக் குன்றிருந்து விழருவி கடல்காட்டிக் கொஞ்சிடுவாள் மலர்கள் காட்டி. இளங்காளை இருட்கதவம் திறந்துநோக்கி இன்னும்எழ வில்லை யோஎன்று) உளஞ்சிவந்து முகஞ்சிவந்து கதிர்க்கரத்தால் உறக்கத்தில் எழும்பு வாள்தாய் குளறினழுந் தன்னவளை வைதிடுவேன் கோணாமல் அன்பு கூர்ந்து முளரிமுகம் காட்டிடுவாள் முத்தமிழால் வைதார்க்கும் வாழ்வு தந்தாள்.