பக்கம்:வாழும் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்களின் வகை 125

காத்தல் தொழிலேப் பூண்டமையால் கடவுள் மக்களால் வணங்கப் பெறுகிருர், அரசன் காவலனுக இருப்பதனால் பெருமை அடைகிருன்.

காப்புக்குப் பின் பல தொழில்களைச் சொல்லும் தொல்காப்பியர் கடைசியில் சிதைப்பு என்ற தொழிலைச் சொல்கிருர். அழித்தல் என்பது அதன் பொருள்.

காக்கும் தொழிலே அளித்தல் என்றும் சொல்வ துண்டு. புதிதாக ஒரு பொருளேக் கொடுப்பதிலும், இருக்கிற பொருளேக் காப்பாற்றுவதே பெரிது என்ற கருத்தை அச்சொல் தருகிறது.

காத்தலும் சிதைத்தலுமாகிய இரண்டு தொழில் களேயும் நினைக்கும்போது அரசனுடைய நினைவு தான் தமிழருக்கு வ ரு கி ன் ற து. இவ்விரண்டுக்கும் உதாரணம் சொல்ல வந்த உரையாசிரியர்கள், “ஊரைக் காக்கும்”, “காட்டை அழிக்கும்’ என்றே காட்டுகிருர்கள், அரசனது முதல் கடமை தன் ாாட்டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானல் பலவாறு யோசித்து முடிவுகட்டிய பிறகே, வேறு வழியின்றி இறுதியாக வைத்துப் பகைவன் நாட்டை அழித்தல் அவன் செயல்’ என்ற கருத்து இவற்றி விருந்து தோன்றுகிறது.

ஊரையும் காட்டையும் காப்பாற்றுகிற அரசனேக் குடிமக்கள் போற்றுவார்கள், புகழ்வார்கள். இவன் கடவுளே ஒப்பான்’ என்றும் அன்பினால் தாயை ஒப்பான்’ என்றும் நன்மை பயப்பதனால் தவத்தை ஒப்பான்' என்றும் உபமானம் சொல்வார்கள். கம்பர் தசரதனப்பற்றிச் சொல்லும்போது இப்படிப் பல உவமைகளைக் கூறுகின் ருர்:

தாய்ஒக்கும் அன்பில்

தவம் ஒக்கும் கலம் பயப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/134&oldid=646210" இலிருந்து மீள்விக்கப்பட்டது