பக்கம்:வாழும் தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்காத பார்வை 13算

என்று திருவள்ளுவர் சொல்வியிருக்கிருர், புலன் களால் உலகில் உள்ள பொருள்களின் தன்மையை, உணர்கிருேம். புலனுக்குத் தட்டுப்படும் அங்கத் தன்மையை மாத்திரம் கொண்டு அதன் இயல்பை மெய்யென்று நினைத்துவிடக் கூடாது.

பாம்பு படம் எடுக்கிறது. அந்தப் படம் கண்ணுடியைப்போல் பளபளவென்று அழகாக இருக் கிறது. கண்ணினலே பார்க்கின்ற பார்வைக்கு அழகாகத் தோன்றுவதனால் அந்தப் படம் நல்லது என்று சொல்லலாமா? புறக்கண்ணுலே கண்ட அளவிலே நின்றுவிட்டால் அழகான கண்ணுடியைச் சட்டென்று கையிலே எடுப்பதுபோல், அங்கப் பாம்புப் படத்தையும் பற்றத்தான் தோன்றும்; குழங்தை அப்படித்தானே செய்யும்? ஆளுல் காம், "ஐயோ பாம்பு' என்று அலறுகிருேம். ஏன்? புறக் கண்ணுலே பார்க்கும் பார்வைக்குப் பிறகும் மற்ருெரு பார்வை நமக்குப் பயன்படுகிறது. அங்த அழகிய படத்தில் உயிரைக் கொல்லும் விஷமும் இருக்கிறது. என்பதை அந்தப் பார்வை சொல்கிறது. 'காகப் பாம்பு அழகிய படம் உடையதாக இருந்தாலும் கொல்லும் நஞ்சையுடைய பிராணி” என்று. நம்முடைய அகக்கண்ணுகிய அறிவு விளக்குகிறது. ஆகையால் கண்ணுலே கண்ட பொருள் பளபளப் பாகத் தோன்றிலுைம், உயிரைப் போக்கும் தன்மை யுடையது அது என்ற உண்மையை உணரச் செய்வது அறிவு. ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற வள்ளுவர் வாக்குக்கு இப்போது ஒருவாறு பொருள் தெரிந்துவிட்ட்து. கண்ணுலே கண்டதோடு கில்லாமல் கருத்தாலும் காணத் தெரிந்தால் அவன் அறிவாளி என்று சொல்லலாம். இங்த அறிவு மிகமிக நுணுகிச் சென்ருல் அவனேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/140&oldid=646223" இலிருந்து மீள்விக்கப்பட்டது